26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
67a922d17a9c47b398

கசிந்த தகவல் ! மோகன்லாலுக்கு கொரோனாவா.? கேரளாவில் பரவும் வீடியோ.!

பிரபல நடிகர் மோகன்லாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சமூகவலைதளங்களில் மர்ம நபர்கள் சிலர் வதந்தி பரப்பி உள்ளதை அடுத்து போலீசார் அந்த நபர்களை தேடிவருகின்றனர்.

இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில் தான் கொரோனா பரவியது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கேரளாவில் ஏராளமானோர் கொரோனாவுக்கு பாதித்தப்போதும் அம்மாநில அரசு அதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் மோகன்லாலுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், இதனையடுத்து அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மர்ம நபர்கள் சிலர் தகவல் கூறும் வீடியோ இணையத்தில் பரவியது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமன்றி கேரள அரசும் கடும் அதிர்ச்சியடைந்தது

இந்நிலையில் இது குறித்த முதல் கட்ட விசாரணையில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்திற்காக அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

d43b2cf0912ab526d7373164dp?c1=2&c2=21733245&c4=http%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Ftamil%2Fnewstm epaper newstm%2Fmokanlalukku%2Bkoronava%2Bkeralavil%2Bbaravum%2Bveediyo newsid 176104820%3Fsr%3Ddailyhunt test&c9=m.dailyhunt

இருப்பினும் இந்த வதந்தியை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்து அந்த நபர்களை தேடி வருகின்றனர். வெகு விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்

இந்த நிலையில் கொரோனா குறித்து வதந்தி பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.