சீரகம் மிக அதிக மருத்துவ குணங்களை கொண்ட மசாலா வகை உணவு பொருள் ஆகும்.
ஒருவர் சீரகத்தை சமையலில் மட்டும் சேர்க்காமல், அந்த சீரகத்தைக் கொண்டு ஒரு டீ தயாரித்துக் குடித்து வந்தால், உடலில் உள்ள பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
சீரகத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து டீ தயாரித்து தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
- உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் இரவில் படுக்கும் முன் சீரக டீயை மறக்காமல் குடித்து வாருங்கள் உடல் எடை விரைவில் குறையும்.
- உடலினுள் தேங்கி இருக்கும் அதிகப்படியான நச்சுக்கள் நீங்கி, உடல் சுத்தமாக இருக்கும்.
- உடலினுள் நச்சுக்களின் தேக்கம் இல்லையென்றால், உள்ளுறுப்புக்களின் செயல்பாடுகள் தங்கு தடையின்றி சிறப்பாக இருக்கும்.
- மலச்சிக்கல் பிரச்சனை உடனே சரியாகிவிடும்.
- சீரக டீ இரத்த சோகை பிரச்சனையை இயற்கையாக சரிசெய்யும். ஒருவருக்கு இரத்த சோகை பிரச்சனையானது இரும்புச்சத்து குறைபாட்டினால் வரக்கூடியது.
- எனவே தினமும் ஒரு டம்ளர் சீரக டீயைக் குடித்து வந்தால், உடலில் இரும்புச்சத்தின் அளவு அதிகரித்து, இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.
சீரக டீ தயாரிக்கும் முறை
- சீரகம் – 1 டீஸ்பூன்
- எலுமிச்சை – பாதி
- தேன் – சுவைக்கேற்ப
- தண்ணீர் – 1 1/4 டம்ளர்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் 1 1/4 டம்ளர் நீரை ஊற்றி, அதில் சீரகத்தைப் போட்டு, ஒரு டம்ளராகும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- பின் அதை இறக்கி வடிகட்டி, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து கொண்டால் சீரக டீ தயார்.
- தினமும் வெறும் வயிற்றில் குடித்தால் அதிக நன்மைகள் கிடைக்கும்.
சக்கரை நோயாளிகளின் கவனத்திற்கு…
-
- சீரகம் சக்கரையின் அளவை இரத்ததில் குறைப்பதற்கு உதவுகிறது.
- எனவே சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
- அகத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் இந்த சீரகத்தை அளவோடு சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேம்படும் ஆயுள் நீடிக்கும்.