25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1 1585742

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் உங்களை உண்மையாக காதலிக்கிறார்களா என்பதை இந்த செயல்களே காட்டிக்கொடுத்து விடுமாம்..!

எல்லா ஆண்களும் ஒரு உறவுகளுக்குள் என்று வரும்போது தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் நல்லவர்கள் அல்ல. இதனால் அவர்கள் தங்களின் அன்புக்குரியவர்களிடம் நல்ல உணர்ச்சிகளைக் கொண்டிருக்கவில்லை என்பதல்ல. அவர்கள் தங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வார்த்தைகளுக்குப் பதிலாகச் செயலின் மூலமாகவே தெரிவிக்க விரும்புகிறார்கள். இது எல்லா உறவுகளிலும் நிகழ்கிறது.

அந்த வகையில், தங்களுடைய காதலன் உண்மையிலயே தங்களை காதலிக்கிறார்களா? என்று யோசனை அல்லது பரிசோதனை செய்து பார்ப்பார்கள். இதுபோன்று பேசுவது அல்லது ஏதாவது செய்வது உறவுக்குள் சிக்கலை ஏற்படுத்தும்.

உங்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதைப் பற்றி உங்கள் காதலன் உங்களுக்குச் சொல்லக்கூடாது. ஆனால் இதை உணர்த்துவதற்கு அவர் ஏதாவது செய்வார். உங்கள் காதலன் உங்களை நேசிக்கிறாரா? இல்லையா? என்று உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், இந்த இக்கட்டுரையை படித்து சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளுங்கள்.3 1585

பாராட்டுவார்

உண்மையான காதலன் உங்களின் குண நலன்களைப் பாராட்டுபவராகவும், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை ஊக்கப்படுத்துபவராகவும் இருக்க வேண்டும். பெண்களின் அழகு மற்றும் தோற்றத்தைப் பாராட்டுபவராக ஆண்கள் இருந்தாலும் கூட, உங்களை நேசிக்கும் உங்கள் காதலன் இதுபோன்ற காரணங்களுக்காக உங்களை நேசிக்கக் கூடியவராக இருக்கக் கூடாது. உண்மையில் உங்களை ஊக்கப்படுத்தவும் உங்களின் குறைபாடுகளை ஏற்றுக் கொண்டும் உங்களைப் பாராட்டுவார். நீங்கள் ஒரு சிறந்த மனிதர் என்பதை அவர் அறிவார். எனவே, எப்போதும் பாராட்டுதலின் மூலமாகவே அவரின் அன்பை உங்களுக்குத் தெரியப்படுத்துவார்.

மதிப்பளிப்பார்

உங்களை உண்மையிலேயே நேசிக்கும் ஒரு மனிதர் நிச்சயம் உங்களை மதிப்பார். அவர் எப்போதும் உங்களிடம் அடக்கமாக நடந்து கொள்வார். அவர் எப்போதும் உங்களின் எண்ணங்களுக்கும் கருத்துக்களுக்கும் மரியாதையளிப்பார். நீங்கள் எதாவது ஒரு விஷயத்தில் தவறு செய்யும்பட்சத்தில் அவர் உங்களைக் கேலி செய்யாமல் ஊக்கப்படுத்தவே நினைப்பார். உங்களை அவர் உண்மையாகவே நேசிக்கிறார் என்பதைத்தான் இது காட்டுகிறது. உங்களை மட்டுமல்ல, அவர் எப்போதும் மற்ற பெண்களையும் மதிப்பார். எந்தப் பெண்களையும் அவமதிப்பதையோ அல்லது அவர்களைப் பற்றி மோசமான விஷயங்களைப் பேசுவதையோ நீங்கள் ஒருபோதும் அவரிடம் காண மாட்டீர்கள்.

ஆலோசனை மற்றும் கருத்துக்களை கேட்பார்

உங்களின் காதலர் உங்களை நேசிக்கிறார் என்பதற்கான அறிகுறிகளில் இதுவும் ஒன்று. எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் உங்கள் ஆலோசனையையும் கருத்துகளையும் கேட்டறிவதைக் கவனத்தில் கொள்வார். ஏனென்றால் அவர் உங்களை மதிக்கிறார், நீங்கள் அவருடைய வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கம் என்பதை அவர் அறிவார். இது மட்டுமல்லாமல், நீங்கள் அவருக்குப் பரிந்துரைக்கும் அனைத்தையும் இணைத்துக்கொள்ள அவர் தன்னால் முடிந்தவரை முயல்வார்.1 1585742

உங்களின் வழியை அவர் ஏற்றுக் கொள்வார்

உங்களை அவர் உண்மையாக நேசிக்கிறார் என்றால், அவர் உங்களை ஒருபோதும் மாற்ற முயல மாட்டார். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை ஏற்றுக்கொள்வார். உங்களிடம் பல குறைபாடுகள் காணப்பட்டாலும் அதை மாற்றிக் கொள்ளுமாறு அவர் ஒருபோதும் கேட்க மாட்டார். உண்மையில், நீங்கள் எவ்வளவு சிறப்பானவர் மற்றும் அழகானவர் என்பதை அவர் எப்போதும் உங்களுக்குத் தெரிவிப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு உறவில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், நீங்கள் ஒருவருக்கொருவர் குறைபாடுகளை எவ்வளவு நேர்த்தியாக ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதுதான்.

உங்களுடன் நேரம் செலவிட விரும்புவார்

உங்களின் காதலர் உங்கள் வாழ்க்கையில் முக்கியமானவர்களை எப்போதும் மதிப்பார். உங்களுடன் சிறிது நேரம் செலவழிக்க அவர் தன்னால் முடிந்தவரை முயல்வார். உதாரணமாக, அவர் உங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பது, மேலும் குடும்ப விழாவில் பங்கேற்பது, உங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் அழைப்பது மற்றும் அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுவது போன்ற யோசனையை அவர் எப்போதும் விரும்புவார்.

கனவுகளுக்குத் துணை நிற்பார்

உங்கள் வாழ்க்கையில் எல்லாவித கனவுகளை அடைவதற்கும் உங்களின் துணை எப்போதும் உங்களுக்கு துணையாக நிற்பார். ஒரு உண்மையான மனிதன் எப்போதும் உங்கள் கனவுகளை ஆதரிப்பார். அவர் உங்கள்ளை ஆதரிப்பவராகவும் மற்றும் எல்லா நேரங்களிலும் உங்களை ஊக்குவிப்பவராகவும் இருப்பார். உங்கள் கனவுகளைக் கைவிட அவர் ஒருபோதும் உங்களை அனுமதிக்க மாட்டார். நீங்கள் சிறந்து விளங்குவதையே அவர் விரும்புவார்.

உங்களுக்காகச் சமைப்பார்

உங்கள் காதலர் செய்யும் இனிமையான காரியங்களுள் சமையலும் ஒன்று. நன்றாகச் சமைக்கத் தெரியாத ஆண்கள் நல்லவர்கள் அல்ல என்று கூறிவிடமுடியாது. ஆனால் குறைந்தபட்சம் சமைக்க முயல்வதன் மூலமாகவோ அல்லது உங்களுக்குப் பிடித்த உணவை ஆர்டர் செய்வதன் மூலமாகவோ உங்களை மகிழ்விக்க முயல்வார்கள்.

நம்பிக்கை வைத்திருப்பார்

நம்பிக்கை இல்லாமல் எந்த ஒரு உறவும் நீடிக்க முடியாது. நீங்கள் உங்கள் இணையை நம்பவில்லை என்றால் அந்த உறவு நீண்ட நாள் நீடிக்காது. உங்களை உண்மையாக நேசிப்பவர் உங்களின் மீதான நம்பிக்கையை ஒருபோதும் இழக்கமாட்டார். அவர் எப்போதும் உங்களுடன் நம்பிக்கையாகவே இருப்பார்.

ஏமாற்ற நினைக்கமாட்டார்

உங்களின் இணை ஒருபோதும் ஆணவத்துடனோ அல்லது தற்பெருமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவராகவோ நீங்கள் அவரை காணமாட்டீர்கள். அவர் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக அவர் மன்னிப்பு கோருவார். மேலும், எந்தவிதமான பழி விளையாட்டையும் தவிர்ப்பார். அவர் செய்த தவறுகளுக்கு அவர் எப்போதும் பொறுப்பேற்பார்.

மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள நினைப்பார்

உங்களை நேசிப்பவர் உங்களை எப்போதும் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வைத்துக் கொள்ளவே நினைப்பார். இது உங்களின் மீதான அவரின் அன்பை வெளிக்காட்டுவதாகவே அமையும். உங்களின் மீது அன்பு மழை பொழிவதை எப்போதும் தவறவிடமாட்டார். நீங்கள் இருவரும் தெருக்களில் நடக்கும்போது அவர் உங்கள் கைகளைப் பிடிப்பதை நீங்கள் அடிக்கடி காண்பீர்கள். அவர் எப்போதும் உங்களுக்காக நாற்காலிகளை இழுப்பார், உங்களுக்காகக் கதவுகளையும் திறப்பார்.

விருப்பு வெறுப்புகளை கவனித்துக் கொள்வார்

உங்களின் விருப்பு வெறுப்புகளைக் கவனித்துக் கொள்பவரே உங்களின் சிறந்த அன்பாளராக இருக்க முடியும். நீங்கள் விரும்பும் அல்லது வெறுக்கிற விஷயங்களைப் பற்றி அவர் எப்போதும் கவனத்துடன் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். நீங்கள் சரியாக இல்லாத நாட்களில் உங்களுக்குப் பிடித்த சாக்லேட்டுகளையும் பூக்களையும் கொண்டு வருவதை அவர் உறுதி செய்வார். உங்களின் நிம்மதியான தூக்கத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ள முயல்வார்.

துயரங்களை உங்களிடம் வெளிப்படுத்துவார்

உங்களின் துணை அவரின் துன்பங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு நீங்கள் ஏற்றவராக இருக்க வேண்டும். இதுவே அவர் உங்களை எந்தளவிற்கு நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்திவிடும். ஏனென்றால், அவர் உங்களைத் தனது இதயத்திற்கு மிக நெருக்கமானவர் என்று கருதுகிறார். அவர் சந்திக்கும் பிரச்சினைகளை உங்களுக்குத் தெரிவிப்பதில் அவர் ஒருபோதும் சங்கடமாக உணரமாட்டார்