28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
trisha tik tok 1

அம்மாடியோவ் என்ன இது? திரிஷா போட்ட டான்ஸ்.. கெட்ட வார்த்தை பாடல்..

கெட்ட வார்த்தைகளை கொண்ட பாடலுக்கு டிக்டாக் செய்ததால் திரிஷா மீது கடுப்பான ரசிகர்கள் நீங்க இப்படி பண்ணலாமா என்று கருத்து பதிவிட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவே தன்னை தானே தனிமை படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அனைத்து மக்களும் தங்களை தானே தனிமைபடுத்தி வருகிறார்கள்.

தற்போது மக்கள் அதிகபடியான நேரத்தை இணையத்திலே செலவு செய்து வருகின்றனர். ஏன் வீட்டில் இருந்து போரடிப்பதால் பிரபலங்களே அதிகபடியாக இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர் .

இதில் திரிஷாவும் தற்போது குதித்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக டிக்டாக் செயலியில் ஆக்டிவ்வாக இருந்து வந்த திரிஷா அதில் பல வீடியோக்களை செய்து வந்தார். இதில் கடைசியாக ஒரு ஆங்கில பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் திரிஷா.

அந்த பாடல் முழுக்க முழுக்க கெட்ட வார்த்தைகளை கொண்ட பாடலாகும். இந்த பாடலுக்கு திரிஷா டிக்டாக் செய்து வீடியோ பதிவிட்டுள்ளதால் ரசிகர்கள் அவரின் மீது கோபம் கொண்டுள்ளனர். உங்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

Trisha on TikTok ??? #trishakrishnan #trishaafp

A post shared by Trisha Krishnan ? (@trishaa.fp) on

நீங்கள் இப்படி டிக்டாக்கில் வீடியோ வெளியிடுவது சரியா என்று ரசிகர்கள் பலர் கமெண்ட்களில் கேள்வி கேட்டு வருகின்றனர். இதுபோன்ற காணொளியை இனிவரும் காலங்களில் தவிர்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு திரிஷா தரப்பில் இருந்து எந்தவிதமான விளக்கமும் வரவில்லை. தற்போது ஆரம்பித்துள்ள டிக்டாக் பக்கத்தில் தான் கொரோனா பற்றிய பல விழிப்புணர்வு காணொளிகளை திரிஷா பதிவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது .