வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் பசியின்மை போன்ற செரிமான பிரச்சினைகள் கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
COVID-19 வைரஸ் வெடிப்பின் மையமான வுஹான் நகரில் 204 நோயாளிகளைப் பற்றிய ஒரு ஆய்வில், 99 நோயாளிகள் (48.5 சதவீதம்) செரிமான பிரச்சினைகளுடன் மருத்துவமனைக்குச் சென்றபோது, இறுதியில் அவர்களுக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது கணடறியப்பட்டது தெரியவந்துள்ளது.
செரிமான பிரச்சினைகளுடன் சென்ற நோயாளிகளுக்கு பசியின்மை (83 சதவீதம்) மற்றும் வயிற்றுப்போக்கு (29 சதவீதம்) ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருந்துள்ளன.
வாந்தியெடுத்தல் (0.8 சதவீதம்) மற்றும் வயிற்று வலி (0.4 சதவீதம்) ஆகியவை பிற செரிமான பிரச்சனைகளாக இருந்துள்ளது.
தொடர்ச்சியான உலர் இருமல் அல்லது சுவாசிப்பதில் சிக்கல் – அத்துடன் செரிமான தொல்லைகள் போன்ற சுவாசப் பிரச்சினைகளையும் பெரும்பாலான நோயாளிகள் அனுபவித்துள்ளனர். ஆனால் ஆய்வில் ஏழு நோயாளிகள் செரிமான அறிகுறிகளை மட்டுமே காட்டியதாக தெரியவந்துள்ளது.
சீன ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, பிற கல்வியாளர்களால் ஆராயப்பட்டு, இந்த வாரம் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் காஸ்ட்ரோஎன்டாலஜி (American Journal of Gastroenterology) பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.