29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
4d2aa659b643ae60be21ba

102 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு எண்ணிக்கை 411

தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து கேரளாவில் அதிக பாதிப்பு இருந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகம் 2-வது இடத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 484 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர இருக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 2,10, 538 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டன. மருத்துவமனைகளில் 23,689 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.