27.3 C
Chennai
Thursday, Aug 14, 2025
201702231118073971 Exposure of skin itching disease SECVPF

வெயில் காலத்தில் வரும் உடல் சூட்டு கட்டிகளால் அவஸ்தையா? இதை முயன்று பாருங்கள்…

பொதுவாக வெயில் காலத்தில் பல சரும பிரச்சினை. பிரச்சினைகளை சந்திக்க கூடும். அதில் ஒன்று தான் உடல் சூட்டு கட்டிகள்.

இது உடலின் பல்வேறு பகுதிகளில் உண்டாகிறது. இவை மிகவும் வலி நிறைந்ததாக கருதப்படுகிறது.

இதனை ஆரம்பத்திலே சரி செய்வது சிறந்தது. இல்லாவிடின் இது அதிக வலியை ஏற்படுத்தும் கட்டிகளாக மாறி விடும்.

அந்தவகையில் தற்போது இந்த கட்டிகளை எப்படி இயற்கை முறையில் போக்கலாம் என இங்கு பார்ப்போம்.

  • இரவு தூங்கும் முன் மஞ்சளை தண்ணீரில் கெட்டியான பதத்தில் குழைத்து கட்டி இருக்கும் இடத்தில் பத்து போடுவதுபோல் ,மஞ்சளை வைத்து பருத்தித் துணியால் கட்டிவிடுங்கள். கட்ட முடியாத இடத்தில் வந்தால் அப்படியே விட்டுவிடுங்கள். இதைத் தொடர்ந்து மூன்று நாள் செய்ய கட்டி வீக்கம் குறைந்து குணமாகும்.
  • விளக்கெண்ணெய்யை இரவு தூங்கும் முன் கால் பாதங்களில் தேய்த்துவிட்டு தூங்கினால் உடல் குளுமையடையும். உடல் சூட்டினால் வந்த கட்டியும் குளிர்ச்சியில் கரைந்துவிடும்.
  • கல் உப்பு அல்லது மணல் இருந்தால் அதை கடாயில் சூடாக்கி பருத்தித் துணியில் கட்டிக்கொள்ளுங்கள். பின் கட்டி இருக்கும் இடத்தில் அதை ஒத்தடம் கொடுத்தால் கட்டி கரைந்துவிடும். சீழ் இருந்தாலும் உடைந்து வெளியேறிவிடும்.
  • வேப்பிலையையும் அரைத்து அதில் மஞ்சள் பொடியும் சேர்த்து கட்டி இருக்கும் இடத்தில் தடவி வர கட்டி சரியாகும்.
  • உடல் சூடாவதால் வரும் இந்த கட்டிகளுக்கு மற்றொரு தீர்வு தண்ணீர் நிறைய குடிப்பதுதான். நன்கு தண்ணீர் குடித்து உடலை ஹைட்ரேட்டடாக வைத்துக்கொண்டாலே உடல் சூடாகாது.