25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
how to get fairy skin instanly in a natural way

தெரிந்துகொள்வோமா? சீரகத் தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் நல்ல விதமான மாற்றங்கள் என்னென்ன?

நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது சீரகம். இது உடலுக்கு ஏராளமான நன்மைகளை செய்கின்றது. இது அகத்தில் இருக்கும் அதிகப்படியான பிரச்சனைகளை தீர்க்க உதவுகின்றது. சீரகத்தை உணவில் சேர்த்து உண்பது நன்மையை தந்தாலும், அதை தண்ணீரில் ஊற வைத்து உண்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது. சீரகத்தை கொதிக்க வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ‘குடித்து வந்தால் ‘வயிற்றுக்கும், உடலுக்கும் நன்மை பயக்கும். அஜீரணத்திற்கு நல்ல நிவாரணம் அளிக்க சீரகம் உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள் சீரகத்தண்ணீரை குடித்து வரலாம். காரணம் வயிற்று வலி, செரிமானப்பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகின்றது. பால் சுரக்க உதவுகிறது. செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் சீராக தண்ணீரை குடிப்பதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைப்பது மட்டுமில்லாமல். செரிமானம் எளிதில் நடைபெற உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய உதவுகின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி :

சீரகத்தண்ணீரை குடிப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் கிடைக்கும். மேலும் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

சளியை எளிதில் குணப்படுத்த உதவுகின்றது.

இதில் பொட்டாசியம் உள்ளதால் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சீரான நிலையில் வைக்க உதவுகின்றது.

கல்லீரல் பாதுகாப்பு :

இது உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்களை வெளியேற்ற உதவுகின்றது. மேலும் பித்தப்பையை பாதுகாப்பாக வைக்க உதவுகிறது. சீரகத்தண்ணியில் உள்ள இரும்புச்சத்து உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. ரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றது.how to get fairy skin instanly in a natural way

மாதவிடாய் கால வலிக்கு :

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகப்படியான வலி ஏற்படும். அதை தடுக்க சீரகத்தண்ணீரை குடிக்கலாம். இதில் கால்சியம், செலினியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் உள்ளதால் தோலுக்கு புத்துணர்ச்சி தருவது மட்டுமில்லாமல் வயிற்று வலியையும் குணப்படுத்த உதவுகிறது.

ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க:

சீரகத்தில் இருக்கும் இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்து உடலில் ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.

சுவாசக் குழாயில் நோய் கிருமிகளை அழித்து சளி பிரச்சனையை சரி செய்ய உதவுகின்றது.

தொடர்ந்து இந்த நீரை குடித்து வருவதால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நியாபக சக்தி அதிகரிக்கும்.

முகம் பளபளக்க:

சீரக நீருடன் மஞ்சளை கலந்து முகத்திற்கு தடவ செய்யலாம். இதனால் சருமத்தில் உள்ள வறட்சி மறைந்து, முகம் மென்மையாகவும், மிருதுவாகவும் தோற்றமளிக்கும். இதில் உள்ள

வைட்டமின் ஈ சத்தானது முகத்தின் வயதான தோற்றத்தை மறைத்து, சருமத்தை இளமையாக வைக்க உதவுகின்றது.

கூந்தல் ஆரோக்கியத்திற்கு:

சீரகத்தண்ணீரை கூந்தலுக்கு தேய்த்து மசாஜ் செய்து வருவதால், முடி நன்றாக வளரும். கூந்தலின் வேர்களுக்கு ஊட்டமளிக்க இது உதவுகின்றது.

அழகையும், ஆரோக்கியத்தையும் தரும் சீரக தண்ணீரை தினமும் குடித்து வாருங்கள். இதனால் உங்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் தெரியும். முகமானது பளிச்சென்று அழகாகவும், மென்மையாகவும் மாறிவிடும். இதை நீங்களும் வீட்டில் ட்ரை செய்து உபயோகித்துப் பாருங்கள், ஆரோக்கியமாக வாழலாம்.