உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். உலகில் பல நாடுகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. கொரோனா வைரஸ் தங்களை தாக்கமல் இருக்க தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், உங்களையுடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டிய நேரம் இது. ஏனெனில், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிக முக்கியமானதாகும்.
நம்முடைய உடல் இயற்கையாகவே நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டதாகும். இதனால் நம்முடைய உடல் நோய்க் கிருமிக்கு எதிரான ஆண்டிபையாட்டிக்கை உருவாக்கிக் கொள்ளும். கொரோனாவை பொருத்தவரை உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நோய் எதிர்ப்புத் திறன் கொண்டவர்கள் அவற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இப்போதுள்ள காலகட்டத்தில் பக்கவிளைவுகள் ஏதுமற்ற, நஞ்சற்ற இயற்கையான உணவு முறைகளை நாடிச் செல்வதே சிறந்தது. இந்த இயற்கை உணவு முறைகளில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடிய மூலிகை பொருட்களைப்
சீந்தில் கொடி (அம்ருதவல்லி)
தாவரவியலில் டைனோஸ்போராகார்டிஃபோலியா என்று அழைக்கப்படும் சீந்தில் கொடி ஒரு ஆயுர்வேத மூலிகையாகும். ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்தாக இது பயன்படுத்தப்பட்டுவருகிறது. சீந்தல் கொடியின் தண்டு ஒரு நல்ல மருந்தாகப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல் ரசாயனமாகவும் பயன்படுகிறது. அது நம் உடல் உறுப்புகளைச் சீராகவும் நேர்த்தியாகவும் செயல்பட உதவுகிறது. சீந்தில் கொடி, நாள்பட்ட இருமல், ஒவ்வாமை, நாசி அழற்சி போன்ற நோய்களைத் தீர்க்க வல்லது. மேலும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் தன்மை கொண்டது எனவும் கூறப்படுகிறது.
பயன்படுத்தும் முறை: உங்களுக்கு போதுமான அளவு தண்ணீரில் சீந்தில் கொடியின் தண்டை நன்றாகக் கொதிக்க வைத்து அவற்றின் சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கவும்.
துளசி
புனிதத் தன்மை கொண்ட துளசி, சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகப்படியான நோய்களை நீக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. நோய்களைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் தன்மை வாய்ந்ததாகும். துளசி இலையின் சாறு தொற்று நோய்களைத் தீர்க்கவல்லது என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பயன்படுத்தும் முறை: உங்களுக்கு போதுமான அளவு தண்ணீரில் 5-6 துளசி இலைகளை வேகவைத்து துளசி டீ தயாரியுங்கள்.
பூண்டு
சமையலறையில் தவறாத இடம் பிடித்திருக்கும் பூண்டு, ரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற வழிவகுக்கிறது.
பயன்படுத்தும் முறை: வெதுவெதுப்பான தண்ணீரில் 1-2 கிராம்புடன் பூண்டைச் சேர்த்து தினந்தோறும் வெறும் வயிற்றில் குடித்து வரவும். மேலும் உணவிலும் பூண்டை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்புச் சக்தியாகப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல், நுரையீரலின் வீக்கத்தைச் சரிசெய்யவும் பயன்படுகிறது. மேலும், சளி மற்றும் இருமலைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படும் மஞ்சள், பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
பயன்படுத்தும் முறை: இஞ்சி மற்றும் எலுமிச்சை கலந்து தயாரிக்கும் டீயில் சிறிதளவு மஞ்சளைக் கலந்து ஒரு நாளைக்கு இருவேளைக் குடிக்கவும். மேலும் தினசரி தயாரிக்கும் உணவில் மஞ்சளைப் பயன்படுத்துங்கள்.
இஞ்சி
பண்டைய மூலிகையான இஞ்சி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நுரையீரல் அழற்சியைக் குணப்படுத்தவும் உதவுகிறது. இஞ்சி சாறு பெரியவர்களுக்கு நிமோனியா மற்றும் சுவாசக் குழாய் நோய் போன்றவற்றைத் தடுப்பதற்கு பயன்படுகிறது. இஞ்சி, டீ-செல்களில் வளர்ச்சியை அதிகப்படுத்துவதன் மூலம் குளிர் மற்றும் இருமலுக்கு எதிராகப் போராடவும் உதவுகிறது.
பயன்படுத்தும் முறை: தண்ணீரில் இஞ்சியைச் சேர்த்து தயாரிக்கும் டீ-யில் சிறிதளவு தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும். மேலும், இதை உங்கள் அன்றாட உணவிலும் சேர்க்கலாம்.
இலவங்கப்பட்டை
இந்த மனம் நிறைந்த மூலிகை, ஆக்ஸிஜனேற்ற சேர்மங்களின் சிறந்த மூலக்கூறாகும். நோய் எதிர்ப்பை தூண்டும் இலவங்கப்பட்டை உடலின் குளிர்ச்சியைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், இருமல் மற்றும் அழற்சி நோய்கள் குணப்படுத்தவும் உதவுகிறது. இலவங்கப்பட்டையில் தயாரிக்கப்படும் பாலிப்பினால் சாறு நோய் எதிர்ப்பு செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் நுண்ணுயிரிகளுக்கு எதிராகவும் போராடுகிறது.
பயன்படுத்தும் முறை; வெதுவெதுப்பான தண்ணீரில் இலவங்கப்பட்டை தூளுடன் சிறிதளவு தேன் கலந்து தினந்தோறும் காலையில் குடித்து வரவும்.
கிராம்பு
கிராம்பு, பல நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க நாட்டுப்புற மருத்துவத்தில் இது நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுகிறது. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை இணைத்து சமநிலைப் படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது என ஒரு ஆய்வு கூறுகிறது. கிராம்பு, உடல் அழற்சியைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், நுரையீரலின் வீக்கத்தைக் குறைக்கவும், சளியை வெளியேற்றவும் உதவுகிறது.
பயன்படுத்தும் முறை: 4-5 கிராம்புகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து கிராம்பு தேநீர் குடிக்கவும். மேலும், உங்கள் இனிப்பு மற்றும் கறிகளுக்குக் கிராம்பு சேர்க்கவும்.
வெங்காயம்
வெங்காயத்தில் வைட்டமின் சி, செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற பல மூலக்கூறுகள் உள்ளதால் இவை உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். வெங்காயத்தில் உள்ள குர்செடின் மிகவும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது அழற்சிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது. நோய்க் கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த வெங்காயம் உதவுகிறது.
பயன்படுத்தும் முறை: சில வெங்காயத் துண்டுகளை தண்ணீரில் 7-8 மணி நேரம் வரை ஊற வைத்து, அந்த தண்ணீரை 3-4 டீஸ்பூன் தண்ணீரை மூன்று அல்லது நான்கு முறை ஒரு நாளைக்குக் குடித்து வரவும். மேலும் உணவில் தவறாமல் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்.
கற்பூரவல்லி
இது ஒரு பூஞ்சை காளான், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஒரு ஆய்வின்படி, கற்பூரவல்லி டி-செல் பினோடைப்களின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலமும், வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும் ஒருவரின் ஆரோக்கியத்தையும் செயல்திறனையும் மேம்படுத்துகிறது. கற்பூரவல்லி நோய்க்கிருமிகளால் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது.
பயன்படுத்தும் முறை: 1-3 சொட்டு கற்பூரவல்லி எண்ணெய்யை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும்.
குங்குமப்பூ
குங்குமப்பூ 90 க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடியது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளை தரக்கூடியது. இதில் வைட்டமின் சி மற்றும் மங்கனீசு எலும்புகளைப் பலப்படுத்தவும், திசுக்களை சரிசெய்யவும், செக்ஸ் ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது. ஆறு வாரங்களுக்கு 100 மி.கி குங்குமப்பூவை உட்கொள்வதால் ரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும் மேலும் ரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவுகிறது.
பயன்படுத்தும் முறை: ஒரு சிட்டிகை குங்குமப்பூவைத் தண்ணீரில் கலந்து குங்குமப்பூ தேநீர் தயாரிக்கவும். இனிப்புகளைத் தயாரிக்கும் போது நீங்கள் அதைச் சேர்க்கலாம்.
– Boldsky