28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
3084 2048x1532 1

அடேங்கப்பா! 8 மாத கர்ப்பத்துடன் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்த நடிகர் விமலின் மனைவி!

8 மாத கர்ப்பத்துடன் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்த நடிகர் விமலின் மனைவி! ஆச்சரியமான தகவல்!!

நடிகர் விமலின் மனைவி ஒரு மருத்துவர். தற்போதைய சூழலில் அவர் 8 மாதம் கர்ப்பமாக இருந்தும், கொரோனாவை அழிக்க பல நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துவருவது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் விமல் தமிழ் சினிமாவில் களவாணி படத்தில் அறிக்கி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர். இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். கொரோனா பாதிப்பால் சினிமா திரைப்பட ஷூட்டிங் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் விமல் அவரது குடும்பத்துடன் மணப்பாறையில் வசித்து வருகிறார். அவரது மனைவி சொந்த ஊரிலேயே மருத்துவம் பார்த்து வருகிறார்.

எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகர் விமலின் மனைவி, இந்த இக்கட்டான ஊரடங்கு சூழலிலும் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருப்பினும், சிகிச்சைப்பெற வரும் நோயாளிகளுக்கு சரியான மருத்துவம் அளித்து அவர்களை நோயிலிருந்து குணமாக்கும் நல்ல டாக்டராக திகழ்கிறார்.3084 2048x1532 1

இதுகுறித்து அவரது கணவர் நடிகர் விமலிடம் கேட்டபோது; என்னுடைய மனைவி ஒரு மருத்துவர் என்பதில் எனக்கு பெருமை. எப்போதுமே அவர் சரியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். ஆகையால் உலக நானுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க கடந்த வாரம் வரை மருத்துவமனைக்கு சென்று கர்ப்பிணியாக இருந்தும் பணியாற்றி வந்தார்.

நிறைமாத கர்ப்பிணி என்பதால் அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது குடும்பத்துடன் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறோம். கிராமத்து மக்களிடையே கொரோனா பற்றிய விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறோம்.