தற்போது தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று தன திறமையை காண்பித்து அதன் மூலம் சினிமாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிய்யாது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், மேடைக் கலைஞராக இருந்து வெள்ளித் திரைப்பக்கம் வந்த அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்துவிட்டார. இவர் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் முதன் முதலில் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் எல்லாமே சிரிப்புதான் நிகழ்ச்சியும் செய்தார். தொடர்ந்து நடன கலைஞராவும், தொகுப்பாளராகவும் பரிணமித்தார் ரோபோ சங்கர். கடந்த 2002ல் பிரியங்கா என்னும் நடனக் கலைஞரை காதலித்து திருமணம் செய்த ரோபோசங்கருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்தமகள் இந்திரஜா அண்மையில் அட்லி இயக்கி, இளையதளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மேலும் இவர் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். இந்தநிலையில் தற்போது உலகமே கொரோனோ தொற்றினால் பீதியடைந்து இருந்து கொண்டிருக்கும் தருணத்தில் மகளுடன் நகைச்சுவை காணொளி ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
#VaathiComing #Master #StayHomeStaySafe pic.twitter.com/hlOGkzr3Fm
— Robo Sankar (@imroboshankar) April 1, 2020