25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1585748

நம்ப முடியலையே… ஆன்லைனில் ஆயிரக்கணக்கில் ஏமாந்த பிரபல நடிகை

ஆன்லைனில் பொருள் வாங்க ஆர்டர் செய்த பிரபல நடிகை சினேகா உல்லல் ரூபாய் 25 ஆயிரம் ஏமாந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதன் காரணத்தால் அனைவரும் ஆன்லைனிலேயே பொருள்களை வாங்கிக் கொள்கின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மும்பையில் இருக்கும் நடிகை சினேகா உல்லல் தனது வீட்டின் தேவைக்காக ஒரு சில பொருள்களை அவரது வீட்டின் அருகில் உள்ள ஒரு குரோசரி ஸ்டோருக்கு போன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார்
அந்த ஆர்டரை பெற்றுக்கொண்ட குரோசரி நிர்வாகத்தினர் சில நிமிடங்களில் பொருள்களை அனுப்பி விடுகிறோம். பணத்தை அவர்களிடமே கொடுத்து விடுங்கள் என்று கூறி இருக்கின்றார். ஆனால் சில நிமிடங்களில் மீண்டும் போன் செய்த அந்த குரோசரி நிறுவனத்தினர் ஊரடங்கு உத்தரவு காரணமாக குரோசரி மூடப்பட்டு விட்டதாகவும் குடோனில் இருந்து நேரடியாக உங்களுக்கு பொருளை டெலிவரி செய்ய உள்ளதால் ஆன்லைனில் நீங்கள் பணத்தை அனுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளார்கள்1585748
மேலும் ரசீது தேவைக்காக உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை கூறினால் அதற்கு உரிய ரசீதையும் தாங்கள் அனுப்பி விடுவோம் என்று கூறியுள்ளார்கள். இதனை அடுத்து சிநேகா உல்லல் தனது கிரெடிட் கார்ட் விவரங்களைக் கூறியுள்ளார். அடுத்த ஒரு சில நிமிடங்களில் அவரது கிரெடிட் கார்டில் இருந்து ரூபாய் 25 ஆயிரம் எடுக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் அவர் விசாரித்தபோது இரண்டாவதாக வந்த தொலைபேசி அழைப்பு குரோசரியில் இருந்து வரவில்லை என்பதும் ஆன்லைன் மோசடி செய்பவரின் மோசடி என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்’ இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது