28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.8 1

சளி, இருமல் பிரச்சனை இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

நமது உடலில் உள்ள சூட்டை சமாளிக்கவும், தேவையற்ற நச்சுப் பொருட்களைத் தடுக்கவும் நமது உடல் தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி.

ஒரு வகையில் பார்த்தால் சளி வருவது கூட நன்மைக்குத்தான். ஆனால் அதை சரி செய்து கொள்ள வேண்டும். நல்ல முறையில் சளி வெளியேறும் போது நன்மையானதே.

நமது பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறையும் உடல் இயற்கைக்கு எதிராகும் போது இந்த சளி அளவு அதிகமாகிறது. இயல்பாக வெளியேற்றும் வழிகள் தடுக்கப்படுவதால் சளி கட்டிப் போகிறது.

உடல் அதை வெளியேற்ற கடும் முயற்சிகள் மேற்கொள்கிறது. கட்டிப்போன சளியை வெளியேற்றும் முயற்சியின் விளைவே, இருமல், தும்மல் என பலவாறான துன்பத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.

சளி வந்ததும் மருந்து சாப்பிடுவது நல்லது என்று நினைக்கிறீர்களா. இல்லவே இல்லை.

தற்சமயத்திற்கு சரி செய்யுமே தவிர, நிரந்தரமாக இல்லை. நமது உடலைச் சூடாக்கி சளி உற்பத்தியை இன்னும் அதிகப்படுத்தி விடும்.

பாதிக்கப்பட்டவர்கள் சளியை வெளியேற்றும் போது ஏற்பட்ட துன்பம் தெரியாமல் இருக்க மாத்திரைகள், மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஆனால், சிறிது காலம் மட்டும் சளி தொல்லை இருக்காது. ஆனால், புதிய நோய்களை உருவாக்கி மருந்துகள் உருவாக்கிய சூட்டால் அதிகரிக்கும் சளியால் பெரிதும் மனிதன் உடல் பாதிக்கப்படும்.625.500.560.350.160.300.053.8 1

  • தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சூடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடலாம்.
  • தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகள், ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போடலாம்.
  • தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம்.
  • மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் வராது.
  • சீரகத்தையும் கற்கண்டையும் சேர்த்து மென்று தின்றால் இருமல் குணமாகும்.
  • நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் சரியாகும்.
  • இஞ்சி சாறு, துளசிச் சாறு, தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடித்தால் சளி, இருமல் போகும்.
  • கற்பூரவள்ளிச் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால் தலைவலி சரியாகும்.
  • குப்பைமேனிக் கீரையை அரைத்து அதில் சுண்ணாம்பு கலந்து தொண்டைப் பகுதியில் தடவினால் தொண்டைக் கட்டு சரியாகும்.
  • பூண்டு சாறு எடுத்து அதில் வெல்லம் கலந்து குடித்தால் சளி, இருமல் குணமாகும்.