28.3 C
Chennai
Tuesday, Jul 15, 2025
aftercare hair
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கோடையில் முடி கொட்டுவதற்கு என்ன காரணம்?

பொதுவாக கோடையில் சருமத்திற்கு மட்டும் தான் அதிக அக்கறை காட்டுவோம், பராமரிப்புக்களையும் வழங்குவோம். ஆனால் தலையில் உள்ள முடியைப் பற்றி சிறிதும் கண்டு கொள்ளமாட்டோம். சிலருக்கு கோடையில் முடி அதிகம் உதிரும்.

* கோடையில் வெயில் அதிகம் உள்ளது என்று, பலரும் நீச்சல் குளித்தில் அதிக நேரம் செலவழிப்பார்கள். நீச்சல் குளத்தில் உள்ள நீரில் உள்ள குளோரின் முடியின் எதிரி. இந்த குளோரின் ஸ்கால்ப்பில் பட்டால், மயிர்கால்களை வலிமையிழக்கச் செய்து, முடி உதிர்வதை அதிகரிக்கும். எனவே நீச்சல் குளத்தில் இறக்கும் முன்னும், பின்னும் நல்ல சுத்தமான நீரில் முடியை அலசிக் கொள்ளவும்.

* சூரியனின் கதிர்கள் அளவுக்கு அதிகமாக சருமத்திலும், முடியிலும் படுமாயின், அதனால் அதிகம் பாதிக்கப்படுவதோடு, அளவுக்கு அதிகமாக வறட்சியடைந்து, முடி உதிர ஆரம்பிக்கும். எனவே வெயிலில் செல்லும் முன், தலைக்கு ஏதேனும் தொப்பி அல்லது துணி அல்லது குடையை கொண்டு தலை முடியை மறைத்தவாறு செல்லுங்கள்.

* கோடையில் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்தினால், முடி மேலும் வலுவிழந்து உதிர ஆரம்பிக்கும். எனவே கோடையில் ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள்.

* தலைக்கு ஹேர் ஜெல், ஷாம்பு போன்றவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். குறிப்பாக கெமிக்கல் அதிகம் கலந்த ஷாம்புக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் உள்ள கெமிக்கலானது சூரியக்கதிர்களில் தொடர்ந்து படும் போது, அதனால் முடி உதிர ஆரம்பிக்கும்.

* கோடையில் அதிகம் வியர்க்கும் இதனால் முடியை இறுக்கமாக கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இறுக்கமாக கட்டினால், வியர்வையினால் மயிர்கால்கள் தளர்ந்து முடி அதிகம் உதிர ஆரம்பிக்கும்.aftercare hair

Related posts

பொடுகு தொல்லையால் ஏற்படும் கூந்தல் பாதிப்புக்கு தீர்வுகள்

nathan

உங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முடி மெலிதாவதைத் தடுக்க இந்த சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க…

nathan

ஆயுர்வேதம் சொல்லும் கூந்தல் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி

nathan

உங்களுக்கு பொடுகு பிரச்சனை போக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

nathan

வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க..!

nathan

கூந்தல் கருமையான நிறத்துடன் செழித்து வளர வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தலைக்கு எண்ணெய் தேய்ப்பது அவசியமா?

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்க இஞ்சியைப் பயன்படுத்துவது எப்படி?

nathan