பிரபல தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து வருபவர் அனிதா சம்பத். திரைப்படங்களிலும் ஒரு சில காட்சிகளில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் வெப்சீரிஸ் ஒன்றில் டாக்டராக நடித்து வருகிறார். அந்த வெப் சீரிஸ் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது இந்தியாவே லாக் டவுனில் இருந்து வருகிறது. இதனால் இந்த நேரத்தில் இது தேவையா என பலரும் அனிதாவை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இதனால் மன வருத்தத்திற்கு ஆளான அனிதா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் உலகமே lockdown இல் இருக்கும் போது, ஊடகவியலாளர்கள் உயிரை பொருட் படுத்தாமல் நாங்கள் தினமும் வேலைக்கு செல்கிறோம்.
எங்களை போற்றவில்லை என்றாலும், தூற்ற வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.