தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.
தக்காளி நமது சருமத்தில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டிஎன்ஏ-வைப் பாதுகாக்கிறது. இந்த டிஎன்ஏ தான் நமது சருமம் வயதாவதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது.
தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது.
சாதரணமாக சருமத்தின் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கம், அதோடு மிகவும் வெயிலில் அலைவதால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளையும் தக்காளி தீர்க்கிறது.
அந்தவகையில் தக்காளியை மருத்துவபயன்பட்டால் மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் பங்குவகிக்கின்றது.
தற்போது சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க தக்காளியை எப்படி பயன்படுத்தலாம் என பார்பபோம்.

- தினமும் தக்காளி பழத்தின் சாறினை கொண்டு மசாஜ் செய்தால் சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க முடியும்.
- தக்காளிப்பழத்தை கூழாக்கி அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்க வேண்டும். ஒரு டீஸ்பூன் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். அந்த கலவையை முகத்தில் பூசிவிட்டு அது நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பிரகாசமாகும்.
- எலுமிச்சை பழச் சாறினை தக்காளி பழச் சாறுடன் கலந்து முகத்தில் தடவி வந்தால் சருமத்தில் உள்ள துளைகள் சரியாகி முகப்பருக்கள் வருவது குறையும்.
- தக்காளி பழத்தை ஜூஸாக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் பூசிவர வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து நன்றாக உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து அவ்வாறு மசாஜ் செய்து வந்தால் சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மாறத்தொடங்கி விடும்.
- எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தினமும் தக்காளி பழச்சாறினை முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும். சரும எரிச்சலை தடுக்க தினமும் தக்காளி பழத்தினை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
- தக்காளி பழச் சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவினால் சருமம் அழகாக மாறுவது மட்டுமில்லாமல் மென்மையாகவும் மாறும். தக்காளி பழத்தை தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசினால் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.