27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
hrithik roshan to play a double r

முதல் மனைவியுடன் சேர்ந்த பிரபல நடிகர் ஹிருத்திக் ரோசன்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் இயக்குநராக இருந்து பின் தயாரிப்பாளராக திகழ்ந்தவர் ராகேஷ் ரோஷன். இவரின் மகன் தான் நடிகர் ஹிருத்திக் ரோசன். தந்தையின் இயக்கத்தில் வெளியான ஆஷா என்கிற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின் கஹோ நா பியார் ஹை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.

அதன்பின் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வளம்வந்தார். அதன்பின் 2000 ஆம் ஆண்டு ஆடை தயாரிப்பாளராக இருந்த சுசன்னே கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹிரிஹான் (14) மற்றும் ஹிரித்ஹான் (11) என்ற இரு குழந்தைகளுக்கு தந்தையானார். அதன்பின் கடந்த 2014ல் ஹ்ருத்திக் ரோசனுக்கும் அவரது மனைவி சுசன்னேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இருவருக்கும் விவாகரத்து பெற்றனர். குழந்தைகள் இருவரும் தாயுடன் சேர்ந்து அவரது வீட்டில் வாழ்ந்து வந்தனர். கடந்த 7 வருடங்களாக மனைவியையும் இரு குழந்தைகளையும் பிர்ந்து வாழ்ந்து வந்தார் ஹிருத்திக்.

இதைதொடர்ந்து கொரானா வைரஸால் ஊரடங்கில் இருக்கும் நிலையில் மனைவியும் அவரது இரு பிள்ளைகளும் ஹிருத்தி ரோசன் வீட்டிற்கு வந்துள்ளனர். பிள்ளைகள் தனிமையை உணர்வார்கள் என்று நினைத்து அவரது வீட்டிற்கு வந்துள்ள்னர். கடந்த 7 வருடங்களுக்கு பிறகு குடும்பத்துடன் வாழ்வதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன் தான் மூத்தமகன் ஹிரிஹானின் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளனர்..