26.8 C
Chennai
Sunday, Dec 29, 2024
NTLRG 20200331163

அடேங்கப்பா! சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் உதவி, மற்றவர்கள் எப்போது?

கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெருமளவில் ஸ்தம்பித்துள்ளது. இதிலிருந்து முழுமையாக மீள மாதங்கள் ஆகும் என்கின்றனர். இதில் மீளும் நடவடிக்கைக்காக நிதி உதவி வழங்கும்படி பிரதமர் மோடியும், தமிழகம் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹிந்தியில் அக்ஷய் குமார் ரூ.25 கோடி, தெலுங்கில் பிரபாஸ் ரூ.4 கோடி, மகேஷ்பாபு, சிரஞ்சீவி தலா ரூ.1 கோடி அல்லு அர்ஜூன் ரூ.1.25 கோடி என நிதி உதவி அளித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள நடிகர்கள் தாங்கள் சார்ந்த சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் சிலர் நிதி உதவி அளித்தனர். பிரதமருக்கோ, முதல்வரின் நிவாரண நிதிக்கோ ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை.NTLRG 20200331163

இதுப்பற்றி சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அளிப்பதாக முதல் நபராக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே பெப்சி தொழிலாளர்களுக்கும் ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். ரூ.50 கோடி, ரூ.80 கோடி என சம்பளம் வாங்கி கொண்டு தங்களை டாப் ஹீரோக்களாக காட்டிக் கொள்ளும் நடிகர்கள் ஒருவர் கூட இன்னும் நிதி உதவி அளிக்காத நிலையில் சிவகார்த்திகேயன் முதல்நபராக அறிவித்து இருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இன்னமும் நடிகர் விஜய், அஜித், விஷால் போன்றவர்கள் தாங்கள் சார்ந்த தொழிலாளர்களுக்கு கூட உதவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.