29.7 C
Chennai
Wednesday, Jul 16, 2025
unnamed 6

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பல உணவுகளில் சேர்க்கப்படும் வெந்தயம் என்ன தான் கசப்பாக இருந்தாலும், தன்னுள் ஏராளமான நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.

குறிப்பாக இதில் புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது.

இத்தகைய வெந்தயத்தை நம் முன்னோர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தார்கள். இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

  • சர்க்கரை நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
  • ஆய்வுகளிலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் டைப்-2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைப்பதாக தெரிய வந்துள்ளது.
  • வெந்தயம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
  • இது மாரடைப்பினால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.
  • ஆய்வுகளில் வெந்தயத்தில் உள்ள சக்தி வாய்ந்த சத்துக்கள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதாக தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
  • வெந்தயத்தை பெண்கள் காலையில் எழுந்ததும் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் வலி நிவாரணி பண்புகள் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புக்களைத் தடுக்கும்.
  • உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.unnamed 6