கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டதாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிர் இயற்பியலாளரும், வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான மைக்கேல் லெவிட் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி இருந்தாலும் கூட தற்போது அங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சமூக விலகல் தான் தொற்றுநோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய போது, மைக்கேல் லெவிட் துல்லியமான கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.
சீனாவில் 80,000 பேர் வைரஸால் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 3,250 உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று அவர் மதிப்பிட்டு இருந்தார்.
அதே போல் தற்போது நடந்துள்ளது. கொரோனா வைரஸின் மையமாக இருந்த ஹூபே மாகாணம் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் சில நாட்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அழிந்துவிடும் என விஞ்ஞானி மைக்கேல் தெரிவித்திருப்பது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.