28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
1576574718

இதோ எளிய நிவாரணம்! நுரையீரலில் உள்ள பிரச்சனைகளை குணப்படுத்தும் இஞ்சி…!!

மஞ்சள் தூள் 2 டேபிள் ஸ்பூன், பூண்டு 400 கிராம் (பொடியாக நறுக்கியது), இஞ்சி 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது) நாட்டுச்சர்க்கரை – 400 கிராம் தண்ணீர் 1 லிட்டர். இதனை காய்ச்சி வடிகட்டி குடித்து வர நுரையீரல் சுத்தம் ஆகும்.மஞ்சளில் சேர்க்கப்படும் மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி மர்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் தன்மைகள் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை நேரடியாக அதிகரிக்கும்.பூண்டில் உள்ள அல்லின் உடலினுள் செல்லும் போது அல்லிசினாக மாறி பூஞ்சை மற்றும் பாக்டீரியல் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி நுரையீரலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலுக்கு ஓர் நல்ல பாதுகாப்பை வழங்கும்.1576574718

இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் என்னும் உட்பொருள் நுரையீரலில் புர்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அழித்து நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இஞ்சி, நுரையீரலை உள்ள சளியை முறித்து உடலில் இருந்து வெளியேற்றும்.ஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, அத்துடன் இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் நீர் ஆகியவற்றை சேர்த்து, குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி விட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்கவும்.இந்த கலவையை தினமும் இருவேளை உட்கொள்ள வேண்டும். அதில் அதிகாலையில் எழுந்ததும் காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். பின் இரவு உணவு உண்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.இந்த நாட்டு மருந்தை உட்கொண்டு வரும் போது, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் இருந்து டாக்ஸின்களும் வெளியேற்றப்படும்.