29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
keerthy sure

இணையத்தை கலக்கும் கீர்த்தி சுரேஷ்! இந்த போஸ் கொடுக்கத் தான் உடம்பை பாதியாக குறைச்சதே..

கீர்த்தி சுரேஷ் என்ற ஒரு நடிகையின் சுவடு தமிழ் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஹிந்தி பட வாய்ப்பை நம்பி பல படங்களில் நடிக்க வேண்டிய வாய்ப்புகளை உதறி தள்ளி விட்டு சென்றார்.

அதன் பலன் தான் தற்போது அதிக அளவு படவாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் உடல் எடையை குறைத்த கீர்த்திசுரேஷ் ரசிகர்களை கவர தவறிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்ததில் ரசிகர்களுக்கு பெரிய ஈடுபாடு இல்லை. சர்கார் படத்திற்கு பிறகு தமிழில் எந்த படவாய்ப்புகளும் இல்லாமலிருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்கள் ஓரளவு வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

தற்போது கேரளாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான மரக்காயர் எனும் சரித்திரப் படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.keerthy suresh 1

தற்போது தெலுங்கில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். நடிகர் நிதின் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ராங்குதே என்ற தெலுங்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உடல் எடையை குறைத்த பிறகு முதன் முதலில் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.