29.6 C
Chennai
Monday, Dec 23, 2024
manfaat buah

சூப்பர் டிப்ஸ்! 7 நாட்கள்.. 2 பேரிச்சம்பழம் மட்டுமே போதும்! தினமும் சாப்பிடுங்கள்…

பேரிச்சம் பழத்தில் உடல் வலிமையை அதிகரிக்கும் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற நிறைய சத்துகள் இருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய உணவு இது.

க்ளுகோஸ், ஃபிரக்டோஸ், சக்ரோஸ் போன்றவை பேரிச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன. ஆகையால் தினமும் பேரிச்சம்பழம் உட்கொண்டால், உங்கள் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும்.

அத்தகைய பேரிச்சம்பழத்தை 7 நாட்கள் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால், உடலின் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ..

  • தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானம், வாயுத் தொல்லைகள், பெருங்குடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
  • பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக உள்ளதால், அது சிறந்த ஒரு வலி நிவாரணியாகவும், கை, கால் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது.
  • பேரிச்சம்பழத்தில் உள்ள மெக்னீசியம் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
  • பேரிச்சம்பழத்தில் இருக்கும் விட்டமின் B6 மூளையின் செயலாற்றலை அதிகரித்து, அறிவாற்றல், நினைவாற்றலை ஊக்குவித்து, ஞாபகசக்தி மற்றும் கவனம் செலுத்துதல் போன்ற திறனை அதிகரிக்கச் செய்கிறது.
  • கர்ப்பிணிகள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால், வலி உண்டாகாமல் சுகப்பிரசவம் ஏற்படவும், பிரசவத்திற்கு பின் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.