28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
158554857

அடேங்கப்பா! அன்றைக்கு நேசமணி! இன்றைக்கு சமுத்திரக்கனி! – வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடங்கி கிடக்கும் நெட்டிசன்கள் திடீரென சமுத்திரக்கனியை வைத்து மீம்களை வெளியிட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடங்கியுள்ள நெட்டிசன்களுக்கு திடீர் கலாய் மெட்டீரியலாக இயக்குனர் சமுத்திரக்கனி சிக்கியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் ப்ரெண்ட்ஸ் படத்தில் காண்ட்ராக்டர் நேசமணியாக நடித்த வடிவேலு குறித்த மீம்கள், செய்திகள் ட்ரெண்டானது. #PrayforNesamani என்ற ஹேஷ்டேகுகள் பெரிய அளவில் வைரலானது. தற்போது சமுத்திரக்கனியை கடல் கன்னி, 96 ஜானு கதாப்பாத்திரம் உள்ளிட்ட பலவற்றில் இணைத்து வித்தியாசமான பல பெயர்களை கொடுத்து நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி உள்ளனர். டைனோசர் உட்பட அனைத்து ஜீவராசிகளுடனும் சமுத்திரக்கனியை போட்டோஷாப்பில் இணைத்து நெட்டிசன்கள் செய்யும் கூத்து இணையத்தில் பயங்கர வைரலாகி உள்ளது.

இதனால் நேசமனி போலவே  #Pray_For_samuthirakani என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி உள்ளது.