25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
vijaydaug

அடேங்கப்பா! விஜய் மகள் திவ்யாவா இது. வெளியான அன்சீன் புகைப்படம். இணையத்தில் செம வைரல்.

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் தான். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பிகில் படத்தை தொடர்ந்து இளைய தளபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் படம் “மாஸ்டர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ ப்ரேம்,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இளைய தளபதி விஜய் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டு காலமாக ஒரு ரொமான்டிக் ஜோடியாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகை தான் சங்கீதா. தளபதி விஜய் அவர்கள் மீது கொண்ட பற்றின் காரணமாக சங்கீதா நம்ம தளபதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 25ஆம் தேதி 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.vijaydaug

விஜய்யின் மகனான சஞ்சய் மற்றும் மகளான திவ்யா ஷாஷா இருவருமே விஜய் படத்தில் நடித்திருக்கிறார்கள். இதில் தஞ்சை விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் தோன்றியிருந்தார். அதேபோல விஜய்யின் மகள் திவ்யா ஷாஷா தெறி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தோன்றி இருந்தார். மேலும், விஜய் மகள் திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். மேலும், இவர் ஒரு பேட்மிட்டன் வீராங்கனை. இந்த விளையாட்டில் நிறைய பரிசுகளை கூட வாங்கியிருக்கிறார். திவ்யா சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. முன்பை விட வளர்ந்து இருக்கிறார் திவ்யா.

 

View this post on Instagram

 

Thalapathy #Vijay’s Daughter #DivyaShasha

A post shared by Behind Talkies (@behindtalkies) on

திரையுலகில் பெரிய நட்சித்திர நடிகராக இருந்தாலும் விஜய் தனது குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார். அவ்வளவு ஏன் தனது மகள் திவ்யாஷாஷா பேட்மிட்டன் வீராங்கனை என்பதால் விஜய் புதிதாக காட்டி வரும் வீட்டில் உள்ளேயே பேட்மிடன் மைதானம் ஒன்றை அமைத்து இருப்பதாகவும் கூட கூறபட்டது. அந்த அளவிற்க்கு பிள்ளைகள் மீது விஜய்க்கு அதீத அக்கறை உண்டு.

அதே போல விஜய் மகன் சஞ்சய் கலை துறையில் ஆர்வம் கொண்டவர். இவர் விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தில் நடித்ததோடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜங்க்ஷன் என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். விரைவில் இவர் சினிமாவில் நடிக்க போவதாக கூட சமீபத்தில் கிசுகிசுக்கபட்டது. ஆனால், விஜய், எல்லாம் படிப்பு முடிந்த பின்னர் தான் என்று கூறிவிட்டார் என்றும் கூட கூறப்பட்டது. ஆனால், இவை எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.