24.8 C
Chennai
Monday, Dec 23, 2024
625.500.560.350.160.300.053.800.

சூப்பர் டிப்ஸ்! வெறும் ஒரே வாரத்தில் தொப்பையை சுருக்கணுமா? தினமும் இப்படி தண்ணீர் குடித்து வயிற்றை நிரப்புங்க!

வெளிநாட்டவரை விட இந்தியர்கள் தான் தொப்பையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். இதனால் அவர்கள் தொப்பையைக் குறைப்பதற்கு நிறைய முயற்சிகளை எடுத்து வந்திருப்பார்கள்.

வெறும் தண்ணீரின் உதவியுடன் மிக விரைவாக தொப்பையை குறைக்க முடியும்.

தொப்பையைக் குறைக்க முயற்சிக்கும் போது, முதல் நாளில் அதிக அளவில் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதனால் உடலில் எனர்ஜியானது அதிகரிப்பதுடன், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல், உடல் பிட்டாக இருக்கும்.

அதுமட்டுமின்றி, ட்ரெட்மில்லில் 30 நிமிடம் நடக்க வேண்டும். அப்படி நடக்கும் போது மெதுவாக மூச்சை உள்வாங்கி வெளிவிட வேண்டும்.

இரண்டாம் நாளில், குறைவான கலோரி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக தண்ணீர் அதிகம் குடிப்பதை நிறுத்தக்கூடாது. இதனால் உடலின் எனர்ஜியானது தக்கவைக்கப்படும். மேலும் குறைவான கலோரி உள்ள உணவுகளானது வயிற்றை நிரப்பும். குறிப்பாக உடற்பயிற்சி அவசியம்.

மூன்றாம் நாளில், வெறும் பழச்சாறுகளையும், ஸ்மூத்திகளையும் குடிக்க வேண்டும். இது வயிற்றை நிரப்பும். இந்நாளில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் உடற்பயிற்சி மிகவும் முக்கியம்.

நான்காம் நாளில், முழு கோதுமை உணவுகளை எடுத்து வர வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய போதுமான ஆற்றல் கிடைக்கும். இந்நாளில் 1 மணிநேரம் ட்ரெட்மில்லில் நடக்க வேண்டும். மேலும் தண்ணீரையும் அதிகம் குடிக்க வேண்டும்.

ஐந்தாம் நாளில் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும். இந்நாளிலும் உடற்பயிற்சியுடன், நீரையும் அதிகம் பருக வேண்டும்.

ஆறாம் நாளில், நட்ஸ் சாப்பிட வேண்டும். இதனால் உடலுக்கு ஆற்றலுடன், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும். மேலும் பசியெடுக்கும் போது இவற்றை மட்டும் உட்கொண்டு வந்தால் வயிறு நிறையும். முக்கியமாக உடற்பயிற்சியும், நீரும் அவசியம்.

ஏழாம் நாளில், பச்சை இலைக்காய்கறிகளான ப்ராக்கோலி மற்றும் பசலைக்கீரையைக் கொண்டு சாலட் செய்து சாப்பிட வேண்டும். இவை நாள் முழுவதும் வேண்டிய எனர்ஜியைத் தரும். மேலும் இவற்றில் நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

இப்போது உடல் எடையை பரிசோதித்து பாருங்கள் பாரிய அளவிலான மாற்றிம் ஏற்பட்டு இருக்கும். மாறாக உணவை விடுத்து எடையை குறைக்க முயற்சி செய்தால் பக்க விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்.