28.4 C
Chennai
Wednesday, Dec 10, 2025
1585542005 6

வைரலாகும் வாத்தி கம்மிங் வெர்ஷன்! – மச்சினிச்சியுடன் குத்தாட்டம் போடும் சாண்டி

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தருபவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டில் இருந்துவரும் நேரத்தில் சாண்டி தனது மச்சினிச்சியுடன் விஜய்யின் மாஸ்டர் பட வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சாண்டியை பார்த்து…. ” கொடுத்து வச்ச ஆளுய்யா நீ ” என ஏக்கத்தில் கமெண்ட்ஸ் செய்தவர்கள் தான் அதிகம். இந்த ஆட்டத்தை கொஞ்சம் நீங்களே பாருங்களேன் மக்களே…

 

View this post on Instagram

 

Vaathi coming ❤️

A post shared by LaLa❤️ (@sandysylvia_official) on