கொரோனா தனிமையை இல்லற வாழ்க்கையில் ஈடுபட பயன்படுத்தப்போவதாக உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
தளபதி விஜயின் தமிழன் படம் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகமான பிரியங்கா சோப்ரா, தற்போது பாலிவுட்டின் டாப் ஹீரோயின். இவர் பிரபல பாடகரான நிக் ஜோனஸை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார். கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த கொரோனாவால் உண்டான சுய தனிமைப்படுத்தலென்பது கடவுள் தங்களுக்கு கொடுத்த வரம் என்று கருதுகிறேன் பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

இருவரும் வேலையில் மும்முரமாக இருந்ததால் தங்களுடைய இல்லற வாழ்க்கையில் அதிகம் ஈடுபட இயலவில்லை என்றும், அதற்கான நேரம் தான் இது என பிரியங்கா சோப்ரா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தங்களுக்கு குடும்ப ஆசை வந்துவிட்டதற்கு இந்த சுய தனிமைப்படுத்துதலும் ஒரு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.