கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை விவகாரத்தில் சீன அரசு பொய்யான தகவலை வெளியிட்டு வருவதாக புள்ளி விவரம் ஒன்று வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது.
நியூயார்க்கில் வசிக்கும் ஹாங்காங்கைச் சேர்ந்த் ஜெனிபர் ஜெங் என்பவர் வெளியிட்டிருக்கும் புதிய புள்ளி விவரங்களை உண்மையிலேயே கதிகலங்கச் செய்கிறது. அவர் சீன நாட்டில் செல்போன் சேவைகளை வழங்கி வரும் 3 நிறுவனங்களின் புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி, சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை சீன அரசு கூறியதை விட பலமடங்கு கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்.
சமூக ஊடகத்தில் ஜெனிபர் ஜெங் வெளியிட்டுள்ள தகவல்கள்: ‘சைனா மொபைல்’ நிறுவனம் மட்டும் கடந்த ஜனவரி மாதம் 8.116 மில்லியன் (81 லட்சம்) வாடிக்கையாளர்களை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மொபைல் போன் பயனீட்டாளர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள்?
அவர்கள், வேறு மொபைல் சேவை நிறுவனத்துக்கு மாறி விட்டார்களா? அல்லது மொபைல் போன் எடுத்துச் செல்ல முடியாத உலகத்துக்கு சென்று விட்டார்களா? சீனாவின் மற்றொரு மிகப்பெரிய மொபைல் போன் சேவை நிறுவனமான ‘சைனா யூனிகார்ன்’, கடந்த ஜனவரியில் 1 மில்லியன்(10 லட்சம்) வாடிக்கையாளர்கள் இழந்துள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் எங்கு சென்றார்கள்?
சைனா டெலிகம்யூனிகேஷன்ஸ்’ என்ற மற்றொரு மொபைல் போன் சேவை நிறுவனம் பிப்ரவரியில் 5.6 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இந்த மூன்று மொபைல் சேவை நிறுவனங்களும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 1.46 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இந்த வாடிக்கையாளர்கள் திடீரென மாயமானது எப்படி?. அவர்கள் கொரோனா வைரசுக்கு பலியாகி விட்டார்களா? இதுதான் இப்போதைய முக்கிய கேள்வி?
ஆனால், இந்த கேள்விகளுக்கு சீன அரசிடம் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை.கொரோனா வைரசுக்கு 3,270 மட்டுமே பலியானாதாக சீன அரசு தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சீனாவில் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியதாகவும், இதனால் அங்கு பலியானர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். எனினும் சீனா அரசு அதனை மறைத்து பலியானவர்கள் எண்ணிகைக்கையை குறைத்து வெளிஉலகத்திற்கு காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
newstm.in