25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
625.500.560.350.160.300.053.800.90

உங்களுக்குதான் இந்த விஷயம்! அதிவேகமாக பரவும் கொரோனா!…. இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க

இன்று அசுர வேகத்தில் பரவி வரும் ஒரு நோயா கொரோனா வைரஸ் மாறியுள்ளது.

சீனாவை பிறப்பிடமாக கொண்ட இந்த வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஜேர்மனி, இலங்கை, இந்தியா போன்ற பல இடங்களில் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இதனை தடுக்க மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மருந்துகள், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் திட்டத்தில் இன்று வரை முயற்சி செய்து கொண்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஒரு பக்கம் மக்கள் இதனை எப்படி இயற்கை முறை மூலம் தடுக்கலாம் என்றும் முயற்சி செய்து வருகின்றார்கள்.

அந்தவகையில் கொரோனா பாதிப்பை தடுக்க சில காய்கறி, பழங்கள், உணவுப்பொருட்கள் உதவி புரிகின்றது என கருதப்படுகின்றது.

இந்த உணவுகள் என்ன என்பதை அறிந்து கொண்டால் இதிலிருந்து எளிதில் விடுபடலாம். தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • நெல்லிக்காய் அல்லது கொய்யாவை, குடை மிளகாய் உடன் சேர்த்து சாலட்டாக செய்து தினமும் உணவில் எடுத்து கொள்ளலாம்.
  • தினமும் 2 தக்காளி பழங்களை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
  • மஞ்சள் கலந்து செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடலாம்.
  • 2 கிராம் சுத்தமான பூண்டுவை 2 நாட்களுக்கு ஒருமுறை அல்லது 7 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம்.
  • இஞ்சி மற்றும் பூண்டுவை அரைத்து, சட்னி அல்லது குழம்பு வைத்து உணவில் எடுத்துக்கொள்ளலாம்.
  • துளசி இலைகளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து குடிக்கலாம்.
  • இஞ்சியுடன் துளசியை சேர்த்து ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • அன்னாசி பூ பூவை பொடியாக்கி தேநீருடன் கலந்து தினமும் 100 மில்லி அளவுக்கு குடித்துவருவது நல்லது.
  • தேங்காய் எண்ணெயை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.
  • எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் ஆகியவற்றுடன் இஞ்சி சிறிது சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். இந்த சாறை உணவிற்கு பின் எடுக்க வேண்டும்.
  • மீன் சமைக்கும் போது அதில் சிறிதளவு வெந்தயத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.
  • தினமும் உணவில் 2 கிராம் கருஞ்சீரகத்தை எடுத்து கொள்ள வேண்டும்.
  • சர்க்கரைவள்ளி கிழங்குடன் சிறிதளவு எலுமிச்சை சாறை கலந்து உணவில் சேர்த்து கொள்ளலாம்.
  • முருங்கைக் கீரையில் எடுத்து கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.