25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
kanikakapoore462

சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கிறாரா கனிகா கபூர்? 4வது முறையும் பாசிட்டிவ்..

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு 4வது முறையாக நடத்தப் பட்ட சோதனையிலும் கொரோனா வைரஸ் பாசிட்டிவ்வாகவே உள்ளது.

கடந்த மார்ச் 9ம் தேதி லண்டனில் இருந்து மும்பை வந்த கனிகா கபூர், விமான நிலையத்தில் கொரோனா சோதனையை திட்டமிட்டு தவிர்த்ததாக செய்திகள் வெளியாகின.

பின்னர், மும்பையில் இருந்து லக்னோ, கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கனிகா கலந்து கொண்டார்.

அச்சத்தில் 160 பேர்

கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் நெருங்கி பழகிய 160 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருக்குமா என்ற அச்சம் தேசத்தையே உலுக்கியது. மார்ச் 20ம் தேதி சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அட்டகாசம்

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையிலும், அதுகுறித்த பயம் இல்லாமல், அலட்சியமாக மருத்துவர்களின் சொல்பேச்சை கேட்காமல், கனிகா கபூர் அட்டகாசம் செய்து வருவதாகவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை மதிக்காமல் நடந்ததாகவும், கொரோனா டெஸ்ட் மீதும் சந்தேகத்தை கிளப்பியாதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்தன.kanikakapoore462

மூன்று வழக்குகள்

சுய தனிமைப்படுத்துதலை பின்பற்றாமல், பலருக்கும் கனிகா கபூர் கொரோனா வைரஸை பரப்பினார் என்று பாலிவுட் ரசிகர்கள் ஹாஷ்டேக்கை உருவாக்கி இந்தியளவில் டிரெண்ட் செய்து திட்டித் தீர்த்தனர். அதன் எதிரொலியாக கனிகா மீது, செக்‌ஷன் 188, 269 மற்றும் 270 பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

4வது முறை

கனிகா கபூரின் கொரோனா சோதனை மீது பெற்றோர்கள் எழுப்பிய சந்தேகத்தின் பேரில், இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக சோதனைகள் நடத்தப்பட்டு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 4வது முறையாகவும் கொரோனா சோதனை நடத்தபட்டு கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளது.kanikakapoorprincecharles

அச்சத்தில் பெற்றோர்கள்

4வது முறையாக கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸின் தாக்கமும் சற்றும் குறைந்ததாக தெரியவில்லை என்ற ரிப்போர்ட்டுகள், கனிகா கபூரின் பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெளிநாட்டுக்கு சென்று உயர் ரக சிகிச்சை அளிக்கவும் லாக் டவுனால் தங்களால் முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

ஒத்துழைப்பு இல்லை

கடந்த மார்ச் 20ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் பாடகி கனிகா கபூருக்கு 9 நாட்கள் கழித்தும், வைரஸின் தீவிரம் குறையவில்லை. இதன்மூலம், மருத்துவர்களின் சிகிச்சைக்கு சரியான ஒத்துழைப்பை கனிகா கொடுக்க மறுத்து வருவகிறாரா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது. ஆனாலும், அவரது உடல் நிலை மோசமான நிலைக்கு செல்லவில்லை என்றே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.