25.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
Amala Paul parents mother Annice Paul

கசிந்த தகவல்! அமலாபாலின் இரண்டாவது திருமணத்தில் பிரச்சினையா?

நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மீம்ஸ்கள் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தமிழில் சிந்து சமமெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் பல முன்னணி நடிகர்களுடனும், பல மொழிகளிலும் நடிப்பில் உச்சம் தொட்டார்.

இவர் இயக்குனர் ஏஎல் விஜயை கடந்த 2014ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து பெற்றார். பின்பு இயக்குனர் விஜய் கடந்த ஆண்டில் ஐஸ்வர்யா என்ற பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தான் ஒருவரை காதலித்து வருவதாக கூறியிருந்த வேளை, தனது காதலர் பாவ்னிந்தர் சிங்கை திருணம் செய்து கொண்ட புகைப்படம் தீயாய் பரவியது.

தனது இரண்டாவது திருமணம் குறித்து வாய்திறக்காத அமலாபாலின் பேச்சை மீறி கணவர் புகைப்படங்களை வெளியிட்டதாக கூறப்படுகின்றது.

இதனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த மீம்ஸ் அவர்களின் திருமண உறவு சுமூகமாக இல்லை என்பதை மறைமுகமாக சொல்லும் வகையில் உள்ளது.

ஆம் தற்போது டெல்லியில் இருவரும் ஒன்றாக வசித்து வரும்நிலையில், அமலா பால் தனது இன்ஸ்டாவின் ஸ்டோரீஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மீம்ஸ் அவர்கள் பிரிந்துவிட்டார்களா? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

அதாவது பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃப்பனி (1961) மற்றும் 500 டேஸ் ஆஃப் சம்மர் ஆகிய படங்களின் ஸ்டில்களைப் பயன்படுத்தி, அமலா பால் மீம்ஸ்களை ஷேர் செய்திருக்கிறார்.

முதல் மீமில் காதலர் ஐ லவ் யூ என்று கூறுவதாகவும் அதற்கு காதலி அதனால் என்ன என்று கேட்கிறார். உடனே காதலர் உன்னை அதிகமாக காதலிக்கிறேன், நீ எனக்கு சொந்தமானவள் என்கிறார். அதற்கு காதலி இல்லை, யாரும் யாருக்கும் சொந்தமானவர்கள் இல்லை என்று கூறிகிறார்.

மற்றோரு மீமில் காதல் ஜோடி பேசிக்கொள்வது போன்று உள்ளது. அதில் இருவரும் ஐ லவ் யூ என்று சொல்லிக் கொண்டோம். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் நான் பொய் சொல்லவில்லை என உள்ளது. இந்த மீம் மூலம், அமலா பால் தனது காதலரின் காதல் பொய்யானது என கூறுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.