image

நடந்தது என்ன? கமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா?

கமலஹாசன் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டாரா? நடந்தது என்ன?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி வருகின்ற சூழ்நிலையில் இந்தியாவும் அதனால் பாதிப்படைந்து வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாட்டை இந்திய அரசு அமல்படுதியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தவர்களை தனிமைப்படுத்தி கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்கும் முறையையும் செயல்படுத்தி வருகிறது.இதற்காக அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக நோட்டீஸ் ஒட்டியும் வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது போலவும், இதனால் அவரது வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் அது நீக்கபட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் தற்போது குழப்பம் ஏற்படுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எல்டாம்ஸ் சாலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமலஹாசன் கட்சி அலுவலம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது வீட்டிற்கு வெளியே தனிமைப்படுத்தப்பட்ட இல்லம் என்று மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே அங்கு ஒட்டிய அந்த நோட்டீசை மாநகராட்சி ஊழியர்கள் நீக்கியுள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகை கவுதமியின் வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட வீடாக நோட்டீஸ் ஓட்டுவதற்கு பதிலாக நடிகர் கமல்ஹாசன் கட்சி அலுவலகம் செயல்படும் வீட்டை தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியதால் தான் தற்போது இந்த குழப்பம் ஏற்படுள்ளது என்று கூறப்படுகிறது.image

இது குறித்து மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்த போது நடிகை கவுதமி சமீபத்தில் வெளிநாடு சென்று தமிழகம் திரும்பியுள்ளார். அதனால் அவரது இல்லம் தனிமைப்படுத்தப்பட்ட இல்லமாக நோட்டீஸ் ஒட்டப்பட வேண்டும் என்பதால் அவரது பாஸ்போர்ட்டில் இருந்த முகவரியை வைத்து மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. ஆனால், கவுதமி பாஸ்போர்ட்டில், கமலஹாசனின் கட்சி அலுவலகம் முகவரி இருந்ததால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டு உள்ளதாக இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதுScreenshot 20200328 122d

இதையடுத்து வெளிநாடு சென்று வந்த நடிகை கவுதமி அங்கு இல்லை என்பதால் அங்கு ஓட்டபட்ட நோட்டீஸ் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சர்ச்சை தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையிலும்,நோட்டீஸ் ஒட்டபட்ட அந்த முகவரியில் தான் தங்கவில்லை என்றும் கட்சியின் அலுவலகம் தான் அங்கு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தன்னை இரு வாரங்களுக்கு முன்னரே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.