27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
NTLRG 2020032818515919

அடேங்கப்பா! ரசிகர்களை குஷியாக்கிய ஆண்ட்ரியா

கொரோனா பாதிப்பைவிட, வீட்டுக்குள் முடங்கிக்கிடப்பது தான் பலருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மக்களை குஷியாக்க, திரைத்துறையை சார்ந்த பலர் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களால் முடிந்த பங்களிப்பை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா நேற்று இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டில் தோன்றி, பாட்டு பாடி அசத்தினார். ஆண்ட்ரியா ஒரு மிகச்சிறந்த பாடகி என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். ரசிகர்களின் வேண்டுகோள்படி அவர்கள் விரும்பிக் கேட்டப் பாடல்களை அவர் பாடினார்.

ஹே ராம் படத்தில் வரும் நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி, வடசென்னை படத்தில் வரும் என்னடி நீ மாயாவி, உள்ளிட்ட பாடல்களை பாடி ஆண்ட்ரியா அசத்தினார். ரசிகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆங்கில பாடல் ஒன்றையும் ஆண்ட்ரியா பாடினார்.

பொதுவாக ஆண்ட்ரியா கலந்துகொண்டு பாடும் இசை நிகழ்ச்சிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். எனவே அது பல சாமானிய ரசிகர்களுக்கு கைக்கெட்டாத கனி தான்.

அதிலும் தங்களுக்கு பிடித்த பாடலை ஆண்ட்ரியாவை பாட வைத்து கேட்பது என்பது அவர்களுக்கு கனவு என்று தான் சொல்ல வேண்டும். தற்போது கொரோனா ஊரடங்கால் சாமானிய ரசிகர்களின் இந்த ஆசைகள் தீர்ந்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

உண்மையான கலைஞனின் வேலை எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல் மக்களை மகிழ்விப்பது மட்டுமே. அந்த வகையில் தான் உண்மையான கலைஞர் என நிரூபித்திருக்கிறார் ஆண்ட்ரியா.NTLRG 2020032818515919