28.2 C
Chennai
Thursday, Jul 3, 2025
facemask
முகப் பராமரிப்பு

உங்களுக்குதான் இந்த விஷயம்! எக்காரணம் கொண்டும் இந்த பொருட்களை முகத்துல போடாதீங்க…! மீறி போட்டால் ஆபத்து தான்

முகத்தை அழகாக்க வேண்டும் என்று நினைத்தாலே போதும் எல்லா பொருட்களையும் எடுத்து முகத்தில் தடவ ஆரம்பித்து விடுவோம்.

இப்படி எதையும் யோசிக்காமல் நாம் முகத்திற்கு பயன்படுத்தும் நிறைய பொருட்களால் சரும பிரச்சனைகள் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. அதைப் பற்றிய ஒரு அலசல் தான் இந்த இது.

சோப்பு

பொதுவாக நாம் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றாலே சோப்பை தான் முதலில் பயன்படுத்துவோம். ஆனால் உண்மையில் முகத்திற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாது.

சோப்பிற்கு பதிலாக பேஸ் வாஷ் பயன்படுத்துங்கள். ஏனெனில் நமது முகசருமம் குறைந்தளவு pH 5.4 – 5.9 அளவு கொண்டுள்ளது. இதுவே சோப்பு என்றால் pH-ன் அளவு 9-10 இருக்கும்.

எனவே சோப்பை முகத்திற்கு பயன்படுத்தும் போது சரும பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சரும அரிப்பு, எரிச்சல், அழற்சி மற்றும் வறண்ட சருமம் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே முகத்திற்கு சோப்பை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

பாடி லோசன்

நிறைய பேர்கள் குளிக்கும் அவசரத்தில் பாடி லோசனைக் கூட முகத்திற்கு பயன்படுத்துவது உண்டு. கண்டிப்பாக இந்த மாதிரியெல்லாம் செய்யாதீர்கள். இதை உங்கள் முகத்தில் அப்ளே செய்யும் போது சரும துளைகள் அடைத்து வேறுபட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

சூடான குளியல்

சூடான குளியல் உங்கள் உடம்பிற்கு இதமாக இருக்கும். ஆனால் அது உங்கள் சருமத்திற்கு கேடு விளைவிக்க வாய்ப்புள்ளது.

ஏனெனில் நீங்கள் சூடான நீரைக் கொண்டு முகம் கழுவும் போது முகத்தில் உள்ள ஈரப்பதம் குறைந்து சரும துளைகள் அடைபடக்கூடும் இதனால் பருக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சூடான நீரைக் கொண்டு முகத்தை கழுவாதீர்கள்.facemask

டூத் பேஸ்ட்

பருக்கள் மீது டூத்பேஸ்ட் தடவினால் சரியாகி விடும், சரும பாதிப்பிற்கு டூத்பேஸ்ட் சிறந்தது இது போன்ற விஷயங்களை நம்பி மக்கள் இதை செய்து வருகிறார்கள்.

ஆனால் உண்மையில் டூத்பேஸ்ட்டில் கலந்துள்ள நிறைய கெமிக்கல்கள் சரும எரிச்சலை ஏற்படுத்தக் கூடும். எனவே எக்காரணம் கொண்டும் டூத்பேஸ்ட்டை முகத்தில் அப்ளே செய்யாதீர்கள்.

Related posts

தெரிஞ்சிக்கங்க…அழகு சாதனப் பொருட்களில் கலந்துள்ள அபாயகரமான ரசாயனங்கள்!!

nathan

ஆண்களுக்கு ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருமையை போக்க சூப்பர் டிப்ஸ்………

nathan

சூப்பர் டிப்ஸ்! மின்னும் முகப்பொலிவை வீட்டிலிருந்தப்படியே பெற சில பேஷியல் டிப்ஸ்!

nathan

தெரிஞ்சிக்கங்க…முகப்பருவை குணப்படுத்த தேங்காய் எண்ணெய் தடவுவது சரியா?

nathan

ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு உங்களை 10 வயசு குறைச்சு காட்டும்!! தினமும் இத ட்ரை பண்ணி பாருங்க!!

nathan

உங்க முகம் ஹீரோயின் மாதிரி ஜொலிக்க…

nathan

உங்கள் முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்போ இத ப்லோ பண்ணுங்க!…

sangika

முகத்துல சுருக்கமா? இந்த 3 குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க!!

nathan

முகத்தின் அழகை மெருகேற்றும் புருவம்

nathan