28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

வீட்டிலேயே நாமாகவே ஃபேஷியல் செய்யும் முறை

ld510நன்றாகக் கனிந்த பூவன் வாழைப்பழத்தில் பாதியை எடுத்து நன்கு கையால் நசுக்கிக் குழைத்துக் கொள்ளுங்கள். பிறகு விட்டமின் ‘ஈ’ மாத்திரை  (காப்ஸ்பூல்) வாங்கி அறுத்தால் அதற்குள் ‘ஈ’ ஆயில் இருக்கும். அந்த ஈ ஆயிலையோ அல்லது ஒரு ஸ்பூன் சுத்தமான தேனையோ கலந்து கழுத்தில்,  முகத்தில் மேல்நோக்கி தேய்த்து சுழல்வட்டமாக 20 நிமிடம் மெல்ல மசாஜ் செய்யுங்கள். நெற்றி, கண்களை சுற்றி நிதானமாக மெதுவாகச் செய்யுங்கள்.

பிறகு ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைத்து ஒரு சிறிய டவலை அந்த நீரில் நனைத்துப் பிழிந்து கை பொறுக்கும் சூட்டுடன் கழுத்து, முகத்தில்  ஒற்றி வாழைப்பழக் கலவையைத் துடைத்து எடுத்துவிடுங்கள். கடைகளில் பரு, வெண், கறுப்பு முளைகள் நீக்கும் ‘சிறிய கருவி’  கிடைக்கும். அதை வைத்து மூக்கின் மேலும் முகத்தில் வேறு இடங்களிலும் இருக்கும் அழுக்கு, பரு, முளைகளை நீக்குங்கள்.

பிறகு கீழ்க்கண்ட மூலிகை பொருட்களால் ஆன ‘பேஸ் பேக்கை’ யோ அல்லது வேறு பேஸ்பேக்குகளையோ போடவும்.
கொஞ்சம் குப்பைமேனி இலை, புதினா இலை, வேப்பிலை, துளசி இலை ஆகிய எல்லாவற்றையும் மிக்ஸியில் சுத்தமாக அரைத்து விழுதை அல்லது  விழுதின் சாற்றை முகம், கழுத்துபகுதிகளில் பூசி 20 நிமிடங்கள்  ஊறினபின் கழுவுங்க இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் முகம் மாசு  மறுவில்லாமல் பளிச்சென்று இருக்கும்.

Related posts

இதை முயன்று பாருங்கள்..எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத பழங்கள் ஃபேஸ் பேக்!!

nathan

உங்களுக்கு தெரியுமா புடவை சாஸ்திரம் ?

nathan

எப்போதுமே இளமையான முகத்தை பெற நினைத்தால் அதற்கு இத செய்யுங்கள்….

sangika

அக்குள் கருமையை நீக்கும் அழகு குறிப்புகள்

nathan

முகப்பருவை போக்கும் வில்வம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… கண்ணுக்கு பூசிய காஜலை நீக்குவதற்கு டிப்ஸ்

nathan

மிளகின் மருத்துவ குணங்கள்!

nathan

வேறொரு பெண்ணுக்கு காதலி கண்முன்னே தாலி கட்டிய காதலன்! தடுக்க போராடிய காதலி

nathan

ஜொலிக்கும் சருமத்தை பெற கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் உங்களுக்கு எவ்வாறு உதவும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan