27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
625.0.560.350.160
முகப் பராமரிப்பு

இதோ எளிய நிவாரணம்! சருமத்தை பாதுகாத்து ஈரப்பதத்துடன் வைக்க வேண்டுமா?

கற்றாழை மருந்துப் பொருளாகவும், அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது.

இது சரும நோய்களுக்கும், முடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. இந்த கற்றாழையில் இருந்து சாறு மற்றும் ஜெல் பெறப்படுகிறது.

இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது பல வகைகள் நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது.

அதிலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, முகம் பளிச்சிடவும் கற்றாழையில் உள்ள ஜெல் போன்ற திரவம் பயன்படுகிறது.

இது அழகு பொருட்கள் தயாரிப்பிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது அந்த வகையில் நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் ஒரு அற்புதமான இயற்கை பொருளாக இருக்கும் கற்றாழை சருமத்திற்கு எந்தவகையில் உதவி புரிகின்றது என்பதை பார்ப்போம்.625.0.560.350.160

google
  • தலை முடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள் சோற்று கற்றாழை மடலை நீக்கி, சாறெடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 45 நாட்கள் வெயிலில் காய வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்கு செழித்து வளரும்.
  • கற்றாழையில் உள்ள ஜெல்லை சுத்தமான நீரில் கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உங்கள் இளமை நீண்ட நாள் நிலைக்கும்.
  • சிலருக்கு முகம் வறண்டு வயதான தோற்றம் போல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் உங்கள் முகம் பளிங்கு போல ஜொலிக்கும்.
  • கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடித்தது வந்தாலே உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் முகத்தில் ஏற்படும் கருந்திட்டுகள் மறைந்து விடும்.
  • கற்றாழை ஜெல்லை தொடர்ந்து முகத்தில் தேய்த்து வர சருமம் வறண்டு போகாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் காணப்படும்.
  • பாத எரிச்சல் மற்றும் பாத வெடிப்பு உள்ளவர்கள் இரவு படுக்குமுன் கற்றாழையின் நுங்கு பாகத்தினை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுத்தால் இந்த நோய் குணமாகும்.
  • தழும்புகள், முகத்திலுள்ள கரும்புள்ளிகள், உலர்ந்த சருமம் என சரும நோய்கள் எதுவாக இருந்தாலும், சிறிது கற்றாழை சாற்றை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். இதனை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவி வேண்டும். அப்போது முகம் பொலிவு பெறும்.

Related posts

அழகான கொழுக்கொழு கன்னங்களை பெற சூப்பர் டிப்ஸ்….

nathan

முகத்துல பரு, மருனு எதுவும் வராம பளிச்சினு இருக்கணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ப்ளீச்சிங் எந்த கால இடைவெளியில் செய்யலாம்?

nathan

பருக்கள் மாயமாய் மறைந்து போக முயன்று பாருங்கள்…

sangika

உங்களுக்கு தெரியுமா சருமத்திற்கு இளமை தரும் உப்பு, சீனி, தவிடு முயன்று பாருங்கள் !

nathan

நீங்கள் அழகில் அதிகம் கவனம் செலுத்தும் நபரா ? அப்ப உடனே இத படிங்க…

nathan

ப்யூடி டிப்ஸ் !

nathan

சருமத்தை பாதுகாக்கும் களிமண் தெரப்பி

nathan

உங்க உதடு கன்னங்களில் உண்டாகும் கருமையை போக்குவது எப்படி தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan