28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
facialhair
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்!உதடுக்கு மேல் மீசை வருவது போல் உள்ளதா?

பெண்களே! உங்கள் உதட்டிற்கு மேலே முடி வளர்வது போல் உள்ளதா? அது உங்களின் அழகையே கெடுக்கிறதா? இதனைப் போக்க அழகு நிலையங்களுக்கு செல்ல சோம்பேறித்தனமாக உள்ளதா? அப்படியானால் வீட்டிலேயே முயற்சி செய்து பாருங்கள். ஆம், எப்போதும் அழகு நிலையங்களுக்கு சென்று தற்காலிக தீர்வு காண்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு எப்படி நிரந்தரமாக போக்குவது என்று காண வேண்டும்.

அதிலும் கோடை ஆரம்பித்துவிட்டது. பலருக்கு வெளியே செல்லவே மிகுந்த கடுப்பாக இருக்கும். ஆகவே அப்போது அழகு நிலையங்களுக்கு செல்லாமல், வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைக் கொண்டு எப்படி உதட்டின் மேலே வளரும் தேவையற்ற முடியை போக்குவது என்று தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது.

அவற்றைப் படித்து தெரிந்து கொண்டு முயற்சி செய்து பாருங்கள். இதனால் எந்த பக்கவிளைவும் இல்லாமல், உதட்டின் மேலே உள்ள முடியைப் போக்கலாம். சரி, அந்த வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

மஞ்சள் தூள்
பெண்களின் உதடுகளுக்கு மேல் வளரும் தேவையற்ற முடியைப் போக்குவதில் மஞ்சள் சிறந்த பொருளாக உள்ளது. ஆகவே மஞ்சள் தூளை பாலில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை உதடுகளுக்கு மேல் தடவி, உலர வைத்து, பின் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒரு மாதத்திற்கு செய்து வந்தால், உதடுகளுக்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சி நாளடைவில் நின்றுவிடும்.

எலுமிச்சை தேவையற்ற முடியை எலுமிச்சையைப் பயன்படுத்திக் கூட நீக்கலாம். அதற்கு எலுமிச்சை சாற்றில் சர்க்கரை மற்றும் சிறிது நீர் சேர்த்து கலந்து, அதனை உதட்டிற்கு மேலே தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இதனை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முட்டை முட்டையின் வெள்ளைக் கருவில் சோள மாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, அதனை உதடுகளுக்கு மேல் தடவி உலர வைத்து உரித்து எடுக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர, நாளடைவில் முடியின் வளர்ச்சி நின்றுவிடும்.facialhair

கடலை மவு கடலை மாவில், பால் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து பேஸ்ம் செய்து, சருமத்தில் தடவி உலர வைத்தால், உதட்டிற்கு மேல் வளரும் முடியின் வளர்ச்சியானது குறைந்துவிடும். அதிலும் இதனை வாரத்திற்கு 2 முறையாவது செய்து வர வேண்டும்.

சர்க்கரை ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு கிளறி, பின் அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஊற்றி 1 நிமிடம் கிளறி இறக்கி, குளிர வைத்து, அதனை உதடுகளுக்கு மேல் தடவி, அதன் மேல் ஒரு காட்டன் துணியை வைத்து, மேலும் கீழும் தேய்த்து, பின் அதனை கீழிருந்து மேலாக உடனே இழுக்க வேண்டும்.

Related posts

பளிச்சென முகம் பிரகாசிக்கbeauty tips tamil for face

nathan

உங்களுக்கு தெரியுமா சேலை கட்டும்போது எப்படி மேக்கப் போட வேண்டும்?

nathan

முகம் பளபளப்பாக மாறணுமா? இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

nathan

இதோ உங்க பளிச் முகத்துக்கு ஹெர்பல் மாஸ்க்ஸ்!

nathan

உங்களின் புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா? அடர்த்தியை சரிசெய்யலாம்

nathan

வீட்டில் செய்யக்கூடிய ரெட் ஒயின் ஃபேஷியல்கள்

nathan

beauty tips.. முகச் சுருக்கம் நீங்கி இளமை தோற்றத்துடன் ஜொலிக்க ஜப்பான் பெண்கள் பயன்படுத்தும் அற்புத மருத்துவம்..

nathan

சூப்பர் டிப்ஸ்! முகப்பரு தழும்பை நிரந்தரமாக போக்க இந்த ஒரு பொருள் போதும்.!

nathan

ஆர்கானிக் ஃபேஷியல் இவ்வளவு நன்மைகளா?

nathan