28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
vvvv
தலைமுடி சிகிச்சை

சூப்பர் டிப்ஸ்.. அடர்த்தியான முடி வேண்டுமா? அப்ப இந்த பூவில் எண்ணெய் செஞ்சு தினமும் யூஸ் பண்ணுங்க…

செம்பருத்தி அழகான பூ மட்டும் கிடையாது. இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன. கூந்தல் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவக்கூடிய இந்த செம்பருத்தி பூ, ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. செம்பருத்தி பூவின் இதழ்கள் மற்றும் இலைகள், கூந்தல் சார்ந்த பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, ஸ்கால்ப் பிரச்சனை, முடி உதிர்வு மற்றும் மேலும் பலவற்றிற்கு சிறந்த தீர்வினை அளிக்கக்கூடியது.

இளம் வயதிலேயே வழுக்கை பிரச்சனையை சந்திப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவர்களுக்கு செம்பருத்தி பூ நல்ல பலனை தரக்கூடும். செம்பருத்தி பூவை பயன்படுத்துவதற்கான காரணங்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால், அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியவில்லையா?

இப்போது நாம் அவற்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். எளிமையான மற்றும் பயனளிக்கக் கூடிய 5 வழிகளை இப்போது கூறப் போகிறேன். இந்த முறைகளுக்கு செம்பருத்தி இதழ்கள் மற்றும் இலைகளை நீங்கள் பயன்படுத்தி வீட்டிலேயே தயாரித்த முடி பராமரிப்பு பொருட்கள் செய்யலாம்…
vvvv

செம்பருத்தி எண்ணெய்
ஆயில் மசாஜ், கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. செம்பருத்தி எண்ணெயில், ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த எண்ணெயை பயன்படுத்தி வாரத்திற்கு 2 முறை முடிக்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்போது, வீட்டிலேயே செம்பருத்தி எண்ணெய் எப்படி செய்வதென்று பார்ப்போம்…

* 10 செம்பருத்தி பூக்களையும், 10 செம்பருத்தி செடி இலைகளையும் எடுத்துக் கொள்ளவும். அதனை சிறிது நீர் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

* ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி, ஒரு கப் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலை ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்க்கவும்.

* இந்த கலவையை 2 முதல் 3 நிமிடங்களுக்கு நன்கு கிளறவும்.

* இப்போது செம்பருத்தி எண்ணெய் தயார்.

* இந்த எண்ணெயை பயன்படுத்தி ஸ்கால்ப்களில் மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் கழித்து ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்தி குளித்திடவும்.

* மீதமிருக்கும் எண்ணெயை அடுத்த முறைக்கு பயன்படுத்த எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

அடர்த்தியான முடி வேண்டுமா? அப்ப இந்த பூவில் எண்ணெய் செஞ்சு தினமும் யூஸ் பண்ணுங்க…
செம்பருத்தி ஷாம்பூ

செம்பருத்தியில் நுரை உண்டாக்கக் கூடிய காரணிகள் இருப்பதால், ஷாம்பூ தயாரிப்பதில் பயன்படுத்த இது மிகவும் ஏதுவானது.

* செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலைகளை 1:3 என்ற விகிதத்தில் எடுத்துக் கொள்ளவும். அதாவது, 5 பூக்களுக்கு 15 இலைகள் என்ற கணக்கில்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, இதில் செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளை சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விடவும்.

* பின்பு, அந்த கலவையை மைய அரைத்து கொள்ளவும்.

* அரைத்த அந்த கலவையுடன், கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்.

* இப்போது, வீட்டிலேயே செய்யப்பட்ட கெமிக்கல் இல்லாத செம்பருத்தி ஷாம்பூ பயன்படுத்த தயார்.
jhhh
செம்பருத்தி மற்றும் நெல்லிக்காய் ஹேர் மாஸ்க்

ஆம்லா என்றழைக்கப்படும் நெல்லிக்காயின் பவுடரானது கூந்தலுக்கு மிகுந்த நன்மை அளிக்கக்கூடியது. செம்பருத்தி மற்றும் நெல்லிக்காய் மாஸ்க் செய்முறை:

* செம்பருத்தி பவுடர் மற்றும் நெல்லிக்காய் பவுடரை சம அளவில் எடுத்துக் கொள்ளவும். செம்பருத்தி பவுடர் அனைத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் கடைகளிலும் சுலபமாக கிடைக்க கூடியது.

* 2 பவுடரையும் ஒன்றாக சேர்த்து நீர் விட்டு கெட்டியான பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.

* இந்த கலவையை முடி மற்றும் ஸ்கால்ப்பில் தேய்க்கவும்.

* 30 முதல் 40 நிமிடங்கள் கழித்து, ஷாம்பூ பயன்படுத்தி தலையை கழுவிடவும்.(தயார் செய்ய செம்பருத்தி ஷாம்பூவை கூட பயன்படுத்தலாம்)
jjhgg
செம்பருத்தி ஹேர் பேக்

முடி பிரச்சனைகளில் மிகவும் பெரியது என்றால் அது வழுக்கை பிரச்சனை தான். இதற்கு சிறந்த தீர்வு என ஆயுர்வேதம் கூறுவது. செம்பருத்தியை தான்.

* 5 செம்பருத்தி பூக்கள் மற்றும் செம்பருத்தி இலைகளை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

* இந்த பேஸ்டை, தலையில் பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்க்கவும்.

* 2 முதல் 3 மணி நேரத்திற்கு இதனை அப்படியே விட்டுவிடவும்.

* பின்பு, செம்பருத்தி ஷாம்பூ பயன்படுத்தி முடியை கழுவிடவும்.

* வாரத்திற்கு 2 முறை இதனை செய்து வருவதன் மூலம் இழந்த முடி மீண்டும் வளருவதை பார்க்கலாம்.
jjhh
செம்பருத்தி மற்றும் தேங்காய் பால்

ஆரோக்கியமற்ற மற்றும் வறண்ட கூந்தலின் வெளிப்பாடு தான் முடி வெடிப்பு. செம்பருத்தி மற்றும் தேங்காய் இரண்டுமே இயற்கை கண்டிஷ்னர்களாகும்.

* செம்பருத்தி பூவின் இதழ்களை கசக்கி, தேங்காய் பாலில் சேர்க்கவும்.

* அத்துடன், கற்றாழை ஜெல்லை, தேன் மற்றும் தயிர் சேர்த்து கெட்டியான பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.

* இந்த பேஸ்ட்டை முடியில் தடவி,, 25 முதல் 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிடவும்.

* பின்னர், மைல்டு ஷாம்பூ பயன்படுத்தி முடியை அலசிடலாம்.

Related posts

முடி 2 இன்ச் நீளமாக வளரச் செய்யும் சில்வர் ஃபாயில் மாஸ்க்!! ட்ரை பண்ணியிருக்கீங்களா?

nathan

பட்டுப்போன்ற கூந்தலுக்கு…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு பொருள் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும் என்பது தெரியுமா?

nathan

கூந்தல் எண்ணெய் பசை நீங்க

nathan

பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்தலுக்கான முதன்மையான 10 காரணங்கள்!!!

nathan

முடி உதிர்வை தடுக்க முட்டையை கொண்டு கூந்தலுக்கு மசாஜ் செய்யுங்கள்.

nathan

வழுக்கைத் தலையில் முடி வளர பூண்டுகளை எப்படி பயன்படுத்துவது?

nathan

பொடுகுப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சைகள்

nathan

கூந்தல் ஆரோக்கியத்தை காக்கும் சீகைக்காய்

nathan