26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்

பெண்களை கவரும் கலர் கலர் காலணிகள்

 

பெண்களை கவரும் கலர் கலர் காலணிகள் விதவிதமான செருப்புகள், ஷூக்கள் மீதான ஆசை பெண்களுக்கு அதிகரித்துவிட்டது. பெண்களின் எண்ணங்களுக்கும், கனவுகளின் வண்ணங்களுக்கும் ஏற்ப விதவிதமான டிசைன்களில் செருப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பொதுவாக, எல்லா செருப்புகளுமே பார்பதற்கு அழகாக இருக்கும்.

செருப்புகளின் அழகை பார்க்காமல், தங்கள் உடல் அமைபுக்கு ஏற்றவாறும், அணியும் உடைக்கு ஏற்றவாறும், ஆரோக்கியத்துக்குரியதாகவும் அதை தேர்வு செய்வது அவசியம். செருப்பு அணியும்போது, அதற்கு பொருத்தமாக ஆடையை தேர்வு செய்வது முக்கியம். கறுப்பு அல்லது டார்க் கலர் ஆடையை அணிந்துகொண்டு, பிரவுன், சந்தன நிற செருப்புகளை அணிந்தால் பொருத்தமாக இருக்காது.

அதேநேரம், கறுப்பு அல்லது டார்க் நிற செருப்பை அணிந்துகொண்டால் பொருத்தமாக இருக்கும். பெண்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இன்றைய புட்வேர் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை, ஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன.

இன்றைய நாகரீக மங்கையர் அதிகம் விரும்பி தேர்வு செய்வது, எம்ராய்டரி வேலைகள் காணப்படும் இந்த செருப்புகளைத்தான். இன்றைய புதுமை விரும்பி பெண்கள், குறிப்பிட்ட மாடல் செருப்புகளை விரும்பிய கலரில் தேர்வு செய்து அணிந்து மகிழ்கிறார்கள். இன்றைய பெண்கள் பெரும்பாலும் பிளாட் (தட்டை வடிவம்) மற்றும் பாயின்ட்டட் வகை (ஹீல்ஸ் போன்ற மெல்லிய வடிவம்) காலணிகளையே அதிகம் தேர்வு செய்கிறார்கள்.

இவைதவிர, ஸ்டெலட் டோஸ், மழைக்காலங்களில் கால்களுக்கு பாதுகாப்பு தரும் லாங் பூட்ஸ், லேக்அப் ஷூ மற்றும் பூட்ஸ், ரெடைல் லெதர், ஓபன் டை ஷூ… என்று பல வகைகளில் தயாராகும் காலணிகள் இன்றைய மாடர்ன் மங்கையரின் அழகு கால்களை அலங்கரிக்கின்றன.

Related posts

கன்னம் இருந்தால் இளமையாகவும், அதிக கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்!….

sangika

கற்றாளையைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவை பேண முடியும்.

sangika

amazing beauty benefits lemon அழகா ஜொலிக்கணுமா? எலுமிச்சையை யூஸ் பண்ணுங்க.

nathan

பிஸ்தா எண்ணெய் ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர். இளமை தரும் பிஸ்தா!

nathan

ரஞ்சிதமே பாடலின் HD வீடியோ சாங் வெளியானது.!

nathan

யாருமே ஹெல்ப் பண்ணல! கதறி அழ வைத்த சுருதி! எங்க அப்பாவுக்கும் என் அம்மாவோட அப்பாவுக்கும் ஒரே வயசு!

nathan

சுவையான உருளைக்கிழங்கு சட்னி

nathan

நமது முக அழகையும் இது பாதுகாக்க பெருஞ்சீரகம்!….

sangika

பாத வெடிப்பு நீங்க

nathan