1. ஒளிரும் சருமத்திற்கு மேரிகோல்டு ஃபேஸ் பேக்:
எப்பொழுதாவது ஃபேஸ் மாஸ்க்கோடு பூக்கள் சேர்த்து முயற்சி செய்து இருக்கிறீர்களா?
இதோ அதற்கு ஏற்ற தருணம், கெந்தா அல்லது சாமந்தி பூக்கள் எளிதாக கிடைக்கின்றன. எனவே ஒரு சில புதிய பூக்களை கொஞ்சம் காய்ச்சாத பால் மற்றும் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் காய விடவும், பின் வெதுவெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவவும்.
இது அற்புதமான வாசனை தருவதோடு, முகப்பருக்கள், கருந்திட்டுக்கள் போன்றவற்றை குணமடைய செய்கிறது. இதை குறைந்தபட்சம் வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை உபயோகிக்கவும். இதனால் சரும இறுக்கமாவதோடு வியக்கத்தக்க ஒளிரும் சருமத்திற்கும் வழிவகுக்கும். இது எண்ணெய் சருமத்திற்கான ஏற்ற ஆயுர்வேத ஃபேஸ் பேக்.
2 மஞ்சள் மற்றும் கடலை பேக்:
இந்த பேக், திருமண நிகழ்வுகளில் மணப்பெண்களுக்கு பூசுவது ஒரு வழக்கமாக உள்ளது. ஏனெனில் இது மணப்பெண்ணின் சருமத்தை மிளிரச் செய்கிறது.
4 டீஸ்பூன் கடலை மாவு அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் செய்யவும். இதனுடன் சிறிது காய்ச்சாத பால் அல்லது பாலாடை சேர்க்க நன்கு மிருதுவாக கலக்கி கொள்ளவும். இதை குறைந்தபட்சம் ஒரு வாரம் ஒருமுறை 10-15 நிமிடங்கள் பயன்படுத்த பிரகாசமான மற்றும் ஒளிரும் சருமம் பெறலாம்.
3 சந்தன் அல்லது சந்தனம் மாஸ்க்:
இதை தயாரிப்பது மிகவும் எளிது, கடைகளில் விற்கும் சந்தனம் அல்லது சந்தனக்கட்டையில் இருந்து கூட தேய்த்து எடுத்துக் கொள்ளலாம். இந்த சந்தனத்துடன் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து ஒரு 15 நிமிடம் முகத்திற்கு போட்டு கழுவவும். பேஸ் மாஸ்க்குகளில் இது பிகவும் பிரபலமானது.
இதன் நன்மைகள், பருக்களை குறைக்கிறது சருமத்தை பொலிவோடும், மிருதுவாகவும் வைக்கிறது.வாரம் 5-6 முறை இதை பயன்படுத்த நல்ல பலன் தரும்.
4 அரோமடிக் பேஸ் மாஸ்க்:
பின்வரும் பொருட்கள் கொண்டு இந்த வாசனை கலவையை தயாரிக்கவும்.
ஒரு சிறிய டீஸ்பூன். சந்தன பேஸ்ட்
ரோஜா எண்ணெய் 2 சொட்டு
லாவெண்டர் எண்ணெய் 1 சொட்டு
கடலை மாவு என்ற 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
இவை அனைத்தையும் தயிர் அலல்து பாலாடை கட்டி கொண்டு கலந்து கொள்ளவும்.
இதை நீங்கள் வாரம் ஒருமுறை 10-15 நிமிடங்கள் பயன்படுத்தினால், உங்களுடைய மன அழுத்ததில் இருந்து விடுபடுவதோடு, இளமையான தோற்றத்திற்கும் வழிவகுக்கும்.