நீங்கள் எவ்வளவு பெரிய செலிபிரிட்டியாக இருந்தாலும் சரியான அளவில் மேக்கப் செய்யவில்லை என்றால் பார்ப்பதற்கு அழகாக தெரிய மாட்டீர்கள். அதிலும் கன்னங்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் பெண்களின் ஒட்டுமொத்த அழகையும் இந்த கன்னத்தசைகள் தான் கூட்டி விடும்.
சில பெண்களுக்கு இயற்கையாகவே அழகான பார்வையான கன்னங்கள் அமைந்து விடும். மற்றவர்கள் தங்கள் கன்னங்களை அழகுபடுத்த மேக்கப் முறைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதை அவர்கள் சரியாக செய்வதில்லை.
எனவே தான் உங்களுக்காக சில மேக்கப் டிப்ஸ்களை கொண்டு உங்களுக்கும் ஆப்பிள் போன்ற பார்வையான கன்னங்கள் கிடைக்க வழி வகை செய்யப் போகிறோம்.
சருமத்தின் தன்மையை அறிதல்
ஒவ்வொரு வரும் வித்தியாசமான சரும தன்மை மற்றும் நிறத்தை பெற்று இருப்போம். எனவே அதை நன்கு உணர்ந்து அதற்கேற்றவாறு க்ரீம்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள் க்ரீம் ப்ளஸ் மாய்ஸ்சரைசர் கொண்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும். இவை உங்கள் சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும்.
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் பவுடர் ப்ளஸை தேர்ந்தெடுக்கலாம். இது உங்கள் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சி விடும்.
மாய்ஸ்சரைசர் பயன்படுத்துதல்
வறண்ட சருமம் உள்ளவர்கள் மேக்கப் போடுவதற்கு முன் கண்டிப்பாக மாய்ஸ்சரைசர் அப்ளே செய்ய வேண்டும். இவை மேக்கப் திட்டு திட்டாக தெரிய விடாமல் தடுத்து முகத்தை பொலிவாக்கி காட்டும்.
ப்ரோன்ஸர் பயன்படுத்துதல் ப்ரோன்ஸர் பயன்படுத்துவதற்கு முன் நீங்கள் கன்ன எலும்பை கண்டறிவது முக்கியம். இதற்கு உங்கள் கன்னதசைகளை உள்ளிழுத்து அங்கே ஒரு வெற்றிடம் உருவாகுவதன் மூலம் கண்டறியலாம் அல்லது விரல்களை கொண்டு கன்ன எலும்பை கண்டறிந்து கொள்ளலாம். இப்பொழுது மேக்கப் ப்ரஷை 45 டிகிரி கோணத்தில் பிடித்து கொண்டு காதை நோக்கி ப்ரோன்ஸரை அப்ளே செய்ய வேண்டும். ப்ரோன்ஸரை உங்கள் சரும நிறத்தை விட சற்று அடர்த்தியாக இருக்கும் மாதிரி அப்ளே செய்யவும். பிறகு புருவ எலும்பிற்கு கீழே காதிலிருந்து கன்னம் வரை ஒரு லேசான லைன் வரைய வேண்டும்.
சமமாக பரப்புதல் இப்பொழுது ப்ரோன்ஸரை கன்னங்களில் சமமாக பரப்ப வேண்டும். எந்த வித திட்டுகளும் இல்லாமல் ஆப்பிள் வடிவில் பரப்ப வேண்டும். லைட்டாக இருந்தால் கூடுதலாக ப்ரோன்ஸரை அப்ளே செய்து கொள்ளுங்கள்.
பேஸ் காண்டூர் ப்ரோன்ஸரை அப்படியே கன்ன எலும்பிலிருந்து தாடை வரை வளைவாக காண்டூர் செய்தால் போதும் கன்ன எலும்புகள் துணிப்பாக தெரியும்.
ப்ளெஸ் பயன்படுத்துதல் நல்ல கலரான சருமத்திற்கு லேசான பிங்க் நிற ப்ளெஸ்யை பயன்படுத்தலாம். அதே நேரத்தில் உங்கள் சருமம் ஆலிவ் ஆயில் கலர் சருமமாக இருந்தால் நீல நிறத்தை பயன்படுத்தலாம். அடர்ந்த கருப்பு நிற சருமமாக இருந்தால் நல்ல துணிப்பான பிங்க் நிறத்தை கொண்டு ப்ளெஸ் செய்யலாம்.
கண்சீலர் பயன்படுத்துதல் காண்டூர் செய்த பிறகு கொஞ்சம் கண்சீலரை பயன்படுத்தலாம். கண்சீலரை அந்த பகுதியில் பரப்பும் போது கன்ன எலும்புகள் துணிப்பாக தனியாக தெரியும்.
ஹைலைட்டிங் செய்தல் உங்கள் கன்னத்தின் உயர்ந்த பகுதியை கண்டறிந்து அங்கே ஹைலைட்ரை வட்ட இயக்கத்தில் ப்ரஷ்யை கொண்டு அப்படியே பரப்பி விடலாம். காதை நோக்கி அப்படியே பரப்ப வேண்டும். கருப்பு நிற சருமத்திற்கு கோல்டன் கலர் ஹைலைட்டரும் கலரான சருமத்திற்கு லேசான நிற ஹைலைட்ரையும் பயன்படுத்தலாம்.
குறிப்புகள் நீங்கள் பவுடர் ஹைலைட்ரை பயன்படுத்தினால் சிறிய ப்ரஷ்யை கொண்டு அப்ளே செய்வது நல்லது. அதே நேரத்தில் லிக்யூட் ஹைலைட்டர் என்றால் சிறிய பஞ்சில் நனைத்து அல்லது விரல்களில் தடவி அப்ளே செய்வது நல்லது. அதே மாதிரி கொஞ்சம் ஹைலைட்ரை புருவ எலும்பிற்கு மேலே அல்லது கண்களின் உட்புற மூலையில் அப்ளே செய்தால் போதும் உங்கள் முகம் இன்னும் அழகு பெறும்.
இறுதி மேக்கப் நன்றாக இறுதியில் ப்ரஷ்யை கொண்டோ அல்லது விரல் நுனியைக் கொண்டே எந்த வித திட்டுகளும் இல்லாமல் மேக்கப்பை சமமாக வட்ட இயக்கத்தில் பரப்ப வேண்டும். லிக்யூட் ஹைலைட்டர் பயன்படுத்தினால் கண்டிப்பாக டிரான்ஸூலசெண்ட் பயன்படுத்த வேண்டும். களையாமல் இருக்க ஸ்ப்ரே பயன்படுத்துதல் அப்புறம் என்ன மேக்கப் நாள் முழுவதும் களையாமல் அப்படியே இருக்க ஸ்ப்ரே அடித்து கொண்டு அழகான ஆப்பிள் கன்னங்களுடன் வலம் வரலாம். டிப்ஸ் மேக்கப் பொருட்களை சரியாக பரப்ப வேண்டும் பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள் நண்பரின் உதவியைக் கொண்டு செய்யலாம் அறையில் சரியான லைட்டிங் இருந்தால் சரியான அளவில் ஹைலைட் மற்றும் ஸ்ஷேடிங் செய்ய முடியும். கொஞ்சம் ப்ரோன்ஸரை அப்ளே செய்து பார்த்து விட்டு அப்புறம் அதிகப்படுத்தவும் நீண்ட நேரம் தாங்கும் ப்ளெஸ்யை பயன்படுத்தினால் நல்லது க்ரீம் ப்ளெஸிற்கு தகுந்த சரியான கலர் பவுடர் ப்ளெஸை தேர்ந்தெடுக்க வேண்டும். இதன் மூலம் மேக்கப் திட்டு திட்டாக தெரிய விடாமல் தடுக்கலாம்.