23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
uytuy
அழகு குறிப்புகள்

தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும். இயற்கை குறிப்புகள்…!!

ஒரு ஸ்பூன் தக்காளி சாறுடன் ஒன்றரை ஸ்பூன் எலுமிச்சை சாறைக் கலந்து கருவளையத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

* உருளைக்கிழங்கைக் கழுவி, தோலுடன் துருவிச் சாறெடுத்து, அந்தச் சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சில நிமிடங்கள் கழித்து எடுத்துவர, கருவளையம் மறையும்.

* பாதாம் எண்ணையை கண்ணுக்கு அடியில் கருவளையம் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கருவளையம் மறையும். இரவில் பாதாம் எண்ணெய் பூசிக்கொண்டு மறுநாள் காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரினால் கண்களைக் கழுவ வேண்டும்.
* வெள்ளரிக்காயை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும். சுத்தமான தேங்காய் எண்ணெய்யை பஞ்சில் தொட்டு கண்ணுக்கு அடியில் மசாஜ் செய்து வந்தால் நாளடைவில் கண் கருவளையம் மறையும்.
uytuy
* சோற்றுகற்றாழையின் தோலையும் முள்ளையும் அகற்றிவிட்டு அதன் ஜெல்லை எடுத்து கண்களுக்கு அடியில் மசாஜ் செய்து பிறகு சுத்தமான பஞ்சினால் துடைத்து எடுத்து வந்தால் கருவளையம் மறையும்.

* பஞ்சை ரோஸ் வாட்டரில் நனைத்து கண்களில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் நாளடைவில் கருவளையம் மறையும். எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு அடியில் ஒத்தி எடுக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும்.

* ஆலிவ் ஆயில் கொண்டு கண்களில் மசாஜ் செய்தால் கண்கள் களைப்பு நீங்கி கருவளையம் மறையும். மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.

Related posts

திருமணமாகி 60 நாட்களில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி

nathan

உண்மையை உடைத்த சுந்தர் சி! குஷ்பூ கோவிலை பார்த்து பொறாமைப்பட்டேனா ?..

nathan

உடல் எடையைக் குறைக்க நினைப்பவரா நீங்கள்? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

சூப்பர் டிப்ஸ்! சளி தொந்தரவுக்கு தீர்வு தரும் பூண்டு மஞ்சள் பால்

nathan

என்ன ​கொடுமை இது? சூப்பர் சிங்கர் புகழ் பிரகதியா இது? அசிங்கமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்

nathan

புருவ‌ங்களு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சி

nathan

நம்ப முடியலையே…கீர்த்தி சுரேஷின் மகனுக்கு பிறந்தநாள் ! வெளியிட்ட போட்டோ..

nathan

சூப்பரான சுரைக்காய் சப்ஜி

nathan

கணவருடன் ஜாலி ட்ரிப்பில் ரம்பா!

nathan