தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1 கப்
சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் – 50 கிராம்
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கேரட் – 3 மேஜைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பீன்ஸ் – 2 மேஜைக்கரண்டி
தண்ணீர் – 200 மி.லி.
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – தேவையான அளவு
எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
முந்திரி – 3 .
கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் சிறு துண்டுகளாக நறுக்கிய பனீரைச் சேர்த்து லைட் ப்ரவுன் கலரில் பொரித்து எடுக்கவும். பொரித்த பனீரைத் தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரியை பொன் நிறமாக வறுத்துப் பனீருடன் வைக்கவும். குக்கரில் 1 மேஜைக்கரண்டி எண்ணெயைச் சேர்த்துச் சிறுத் துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கி, உடன் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், ஊற வைத்த அரிசியையும் சேர்த்து வதக்கவும். போதுமான உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்துப் பிரட்டவும். பொரித்த பனீரைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
* குறிப்பு கூடுமானவரை சமையலுக்கு ரீபென்ட் ஆயிலை தவிர்த்து, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கடலை எண்ணெய் (அ) நெய்யைச் சேர்த்து சமைக்கவும்.