சிறந்த ஆரோக்கியமான தலைமுடியைப் பெறுவதற்கு தலைமுடிப்பராமரிப்பு மிகவும் அவசியமான ஒன்று.தலைமுடிப் பராமரிப்பு என்பது தலைமுடியை ஆரோகியமாகப் பேணுவதாகும். இதனால், தலைமுடிப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம், அழகிய தலைமுடியைப் பெறலாம். நம்மில் பெரும்பாலானோர் சாதாரணமாக தலைமுடிப் பராமரிப்பு செய்து கொள்கின்றனர்.
ஆனால் அவர்கள் கூடுதலான பராமரிப்பினை மேற்கொள்ளமாட்டார்கள். நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறுவதற்கு கூடுதல் பராமரிப்பு மிக அவசியம். தலைமுடியில் குறிப்பாக பிரச்சனை ஏதும் தோன்றாத வரையில், தலைமுடி நன்றாகவே தோற்றமளிக்கும்.
இக்காலத்தில் சாதாரணமாகக் காணப்படும் தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் என்பது, எண்ணெய் பசையுள்ள தலைமுடி, வறண்ட கூந்தல், அரிக்கின்ற ஸ்கால்ப், உடையும் கூந்தல், உதிரும் கூந்தல் போன்றவையாகும். ஆனால் இத்தகைய கூந்தல் சார்ந்த பிரச்சனைகளை கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில வீட்டு மருத்துவத்தின் மூலமாகவே குணப்படுத்தி விட முடியும். இப்போது அந்த வீட்டுப் குறிப்புகளைப் பார்ப்போமா!!!
கூந்தல் கண்டிஷனராக முட்டை
முட்டை என்பது இயற்கையான கூந்தல் கண்டிஷனர் ஆகும். அதிலும் மஞ்சள் கருவும், வெள்ளைக்கருவும் சேர்ந்து முழுமையான கூந்தல் கண்டிஷனராகிறது. எண்ணெய் பசை அதிகமுள்ள கூந்தலை பேணுவதற்கு வெள்ளைக்கரு உதவுகிறது. வறண்ட மற்றும் உடையும் கூந்தலுக்கு மஞ்சள் கரு உதவுகிறது. எனவே கூந்தலின் தன்மைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். அதிலும் உங்களுக்கு வறண்ட கூந்தல் இருந்தால், முட்டையின் மஞ்சள் கருவினை எடுத்து தலைக்கு தடவிக் கொண்டு 20 நிமிடங்கள் கழித்து நன்கு அலசிவிடவும். எண்ணெய் பசையுள்ள தலைமுடி என்றால், வெள்ளைக்கருவினைப் பயன்படுத்தவும். முட்டையைக் கண்டிஷனராகப் பயன்படுத்த வேண்டுமென்றால் முழு முட்டையினையும் பயன்படுத்தவும்.
உடைகின்ற மற்றும் பொலிவிழந்த கூந்தலுக்கு தயிர் சாதாரண தயிரை தலை முடியில் நன்றாக படும் வண்ணம் தடவவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் அலசவும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலமானது மயிர்க்கால்களை வலுப்படுத்தும். சுற்றுச்சூழல் மாசடைவதினாலும், தலைமுடி பராமரிப்பிற்கு வெவ்வேறு வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவதனாலும், தலைமுடி வலுவிழந்து உடைகிறது. எனவே இப்பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
அரிக்கின்ற ஸ்கால்ப்பிற்கு எலுமிச்சை முறையான உணவுப்பழக்கமின்மை, சுற்றுச் சூழலில் மாற்றம் மற்றும் பதட்டம், மன அழுத்தம் ஆகியவற்றால், தலையில் அரிப்பு தோன்றும். 2 மேசைக்கரண்டி எலுமிச்சம்பழச் சாறு மற்றும் 2 மேசைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து கொண்டு தலையில் படும் வண்ணம் மசாஜ் செய்து கொள்ளவும். பின் 30 நிமிடங்கள் கழித்து நன்கு அலசிவிட வேண்டும்.
வலுவிழந்த முடிக்கு பீர் குடிக்கின்ற பீரை நேரடியாக தலைமுடியில் தடவினால், பீரிலுள்ள ஈஸ்ட் தலைமுடிக்கு மிகவும் நல்லது. அதிலும் ஒரு முட்டை, 1 மேசைக்கரண்டி சூரிய காந்தி எண்ணெய், அரை கப் பீர் ஆகியவற்றைக் கலந்து கொண்டு தலைமுடியில் தடவுங்கள். இதனால் தலைமுடியானது இழந்த ஜீவனை மீண்டும் பெறும்.
வெயிலால் சேதமான முடிக்கு தேன் ஒரு கோப்பையில் கால் கப் தேன் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 5-6 மேசைக்கரண்டி ஆலிவ் எண்ணெயை சேருங்கள். இக்கலவையை தலைமுடியில் தேய்த்துக் கொள்ளுங்கள். வெயிலால் பாதிக்கப்பட்ட தலைமுடி இதன் மூலம் நல்ல பராமரிப்பினைப் பெறும். மேலும் தேனானது வெயிலால் பாதிக்கப்பட்ட தலைமுடிக்கு நல்ல ஈரத்தன்மையை அளிக்கும். ஆலிவ் எண்ணெயானது வைட்டமின் ஈ நிறைந்த இயற்கையான ஹேர் கண்டிஷனர் ஆகும்.
சிக்குப்பிடித்த கூந்தலுக்கு அவகேடோ பழுத்த அவகேடோ பழம் ஒன்றை எடுத்துக்கொண்ரு அதனை நன்கு மசித்துக்கொள்ளவும். இதனை தலை முடியில் நன்கு தடவவும். இருபது நிமிடங்கள் கழித்து நீரில் அலசவும். அவகேடோ பழத்துடன் தயிர் அல்லது முட்டை மஞ்சள் கருவினைக்கலந்து கூட தலைமுடியில் தடவி சிக்கினை நீக்கலாம்.
சமையல் சோடா பராமரிப்பு சிறிதளவு சமையல் சோடா எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து தலைமுடியில் தடவிக் கொள்ளவும். இது தலைமுடியில் உள்ள தேவையில்லாத அழுக்குகளை இது நீக்கிவிடும்.