அன்பு” என்ற அற்புத உணர்வு முதலில் நம்மில் இருந்து தொடங்க வேண்டும். “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்று வள்ளுவர் கூறியப்படியே அன்பை நம்மிடம் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். நமது உடல் அமைப்பு, செயல்கள், குணநலன்கள் இப்படி ஒவ்வொன்றையும் நாம் நேசிக்க கற்று கொள்ள வேண்டும். அந்த வகையில் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் தங்கள் முடியின் மீது அளவற்ற பிரியம் இருக்கத்தான் செய்யும்.
அதிலும் ஆண்களுக்கு தாடி என்றால் கொள்ளை பிரியம். இப்போதெல்லாம் நடிகர்கள் தாடியுடன் இருந்தால்தான் பெரிய ரசிகர் கூட்டமே அவர்களுக்கென உருவாகிறது. பல ஆண்கள் இந்த தாடி பிரச்சினையால் பாதிக்கப்படுவதும் உண்டு. தாடி நன்றாக வளர்ந்து நீங்கள் கெத்தாக இருக்க உதவும் உணவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொண்டு நலம் பெறலாம் நண்பர்களே.
தாடியின் மகத்துவம்…!
ஆண்களுக்கு மட்டுமில்லாமல் பெண்களுக்கும் தாடி மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அந்த காலத்தில் இருந்தே பெண்களுக்கு தாடி அதிமாக வைத்த ஆண்களை மிகவும் பிடிக்குமாம். ஆண்களும் பெண்களை கவர்வதற்காகவே அழகான நீளமான தாடியை வளர்ப்பார்களாம். ஒவ்வொரு மதத்தவரும் ஒவ்வொரு விதமாக தாடியை வளர்க்கும் பழக்கம் பல ஆயிரம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தாடிக்கான ஹார்மோன் எது..?
ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் ஒவ்வொரு சிறப்பு ஹார்மோன் இருக்கும். அவைதான் அந்த குறிப்பிட்ட உறுப்பின் மொத்த செயல்பாட்டையும் பார்த்து கொள்ளும். அந்த வகையில் தாடியின் வளர்ச்சிக்கு துணை புரியும் ஹார்மோன் DHT (dihydrotestosterone) தான். உடலில் அதிகமான அளவில் கார்போஹைட்ரடும் குறைந்த அளவில் புரதமும் இருந்தால் தாடி நன்கு வளருமாம்.
உருளைக்கிழங்கு உங்கள் தாடி கருகருவென அதிகம் வளர வேண்டுமென்றால், உங்கள் உணவில் உருளைக்கிழங்கை சேர்த்து கொள்ளுங்கள். மேலும், இதில் உள்ள அதிகமான புரதம், தாடி முடிக்கு ஊட்டத்தை தரும். மேலும், இவை DHT ஹார்மோனை அதிகம் சுரக்க செய்வதால் தாடி எளிதில் வளருமாம்.
முட்டை ஆண்கள் தங்களின் உணவில் சீரான அளவில் முட்டையை சேர்த்து கொண்டாலே தாடி அருமையாக வளரும். அதாவது இவற்றில் உள்ள Beta carotene தாடியின் வளர்ச்சியை அதிகரிக்குமாம். மேலும், கருப்பான அடர்த்தியான முடியை முட்டை பெற்று தருகிறது.
ஆரஞ்சு சாறு வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் நிறைந்துள்ள ஆரஞ்ச் பழத்தை சாறு பிழிந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான உடல் நலத்தை பெறலாம். குறிப்பாக இவை கொலாஜென் என்ற மூல பொருளை உடலில் உற்பத்தி செய்து தாடி முடியை இழக்காமல் செய்கிறது. அத்துடன் முக அழகையும் பாதுகாக்கிறது
உலர் திராட்சை பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும் இந்த உலர் திராட்சைகள் செய்யும் நன்மைகள் ஏராளம். இதில் போரான் என்ற முக்கிய சத்து இருக்கின்றது. இவை testosterone and DHT என்ற இரு முதன்மையான ஹார்மோனைகளை சுரக்க செய்து, தாடியின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். மேலும், முடியின் வளர்ச்சியையும் அதிகரிக்க செய்யும்.
மீன் புரசத்து அதிகம் கொண்ட மீன்களை சாப்பிட்டு வந்தாலே தாடி பக்காவாக வளரும். மீன்களில் உள்ள பல வகையான ஊட்டசத்துக்கள் உடலின் செயல்பாட்டை சீராக வைப்பதோடு, சருமத்தின் அழகையும் பாதுகாக்கும். மேலும், இவை ஆண்களின் தாடி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பாதாம் பொதுவாகவே பாதாம் ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் நலனையே தருகிறது. வைட்டமின் ஈ, புரதம், நார்சத்து, மெக்னீசியம் என எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது. இவை தாடியின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.
காலே (Kale) காலே என்று அழைக்கப்படும் இந்த வகை உணவு பொருளில் எண்ணற்ற நலன்கள் உள்ளன. இவற்றில் வைட்டமின் எ அதிகம் உள்ளதால், முகத்தின் திசுக்களை மென்மையாக்கும். அத்துடன் தாடி முடிகள் உடைதல், உதிர்தல் போன்ற பிரச்சினைகளை தடுக்கும்.
பிரேசிலியன் நட்ஸ் நாம் சாப்பிடும் கொட்டை வகைகளை போன்றுதான் இந்த பிரேசிலியன் நட்ஸும். இவை இயற்கையாகவே தாடி முடிகளை நன்றாக வளர செய்யுமாம். இவற்றில் 1,917mcg செலினியம் இருப்பதால் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், தாடி முடி நீண்ட நாட்கள் வளராமல் இருப்பர்களுக்கு இது சிறந்த தீர்வு.
கேரட் உடல் நலனை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பெரிதும் பயன்படும் கேரட், தாடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறதாம். இதில் உள்ள வைட்டமின் எ, பீட்டா கரோடின் போன்றவை தாடி முடியின் வளர்ச்சிக்கு முக்கியமாக தேவையானது. மேலும், பயோட்டின் இதில் இருப்பதால் முடியின் வளர்ச்சிக்கும் இது உதவும்.
இறைச்சி சிவப்பு இறைச்சியில் அதிக அளவில் நிறையுற்ற கொழுப்புகள் இருக்கிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் டெஸ்டோஸ்டெரோனை அதிகம் சுரக்க செய்யும். குறிப்பாக மாட்டிறைச்சியில் இவை அதிகமே உள்ளது என ஆரய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
வேர்க்கடலை பயோட்டின் அதிக அளவில் உள்ள இந்த நிலக்கடலை உடலுக்கு நலனை தருவதோடு, முடியை பராமரிக்கவும் உதவுகிறது. மற்ற உணவுகளை காட்டிலும் முதன்மையான அளவில் இதில் பயோட்டின் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே நிலக்கடலையை சாப்பிட்டு வந்தால் தாடி நன்றாக வளரும். இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.