25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்துக்கு அழகு புருவம்

 

228259307

வில்லென வளைந்த புருவம் என்று கவிஞர்கள் பெண்களின் புருவத்தை வில்லுக்கு ஒப்பிடுவார்கள். புருவமானது பெண்களின் முகத்தையே மாற்றி அழகாக்கும் தன்மை கொண்டது. சாதாரணமான இருக்கும் பெண்கள் கூட பியூட்டி பார்லர் சென்று புருவத்தை திருத்திய உடன் 50 சதவீதம் அழகாகி விடுகிறார். அந்த அளவிற்கு முகத்தின் வடிவமைப்பையே மாற்றும் தன்மை புருவத்திற்கு உண்டு. கண்களை பெரிதாக்கும் சில பெண்கள் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால் அவர்களது கண்களைப் பார்த்தால் இடுங்கிய மாதிரி இருக்கும். இப்படி இடுங்கிய மாதிரி இருப்பதற்கு புருவங்கள் திக்காக இருப்பதும் ஒரு காரணம் தான். புருவங்கள் திக்காக இருப்பவர்களுக்கு கண்கள் சிறியதாகத் தெரியுமே தவிர உண்மையில் அவர்களின் கண்கள் சரியான அளவில்தான் இருக்கும். எனவே

புருவத்தை மெல்லியதாக திரடிங் செய்து கொண்டால் கண்களின் அழகு எடுப்பாகத் தெரியும். அதோடு லைட் கலரில் ஐ ஷடோவும் மஸ்காராவும் பயன்படுத்தவும். கண்கள் இன்னும் அழகாகத் தெரியும். சிலருக்கு புருவங்கள் இருப்பதே தெரியாது. அத்தோடு புருவ முடிகள் மிகவும் குறைவாக இருக்கும். இவர்கள் புருவத்தை திரடிங் செய்தால் புருவங்கள் அழகாகத் தெரியும். ஆனால் புருவத்தை மிகவும் மெல்லியதாக ஷேப் செய்யாமல் சற்று திக்காக வைத்துக் கொள்ளலாம். புருவத்தை திரடிங் செய்து கொள்ளப் போகும் போது ஐபுரோ பென்சிலால் வரைந்து கொண்டு போவது நல்லது. ஏனென்றால் நாம் விரும்பியபடி புருவத்தை ஷேப் செய்து கொள்ளலாம். நெற்றி பெரியதாக இருக்கிறதே, நெற்றியின் அளவைக் குறைத்து காட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று சில பெண்கள் எப்போது கவலையுடன் இருப்பார்கள். இவர்கள் தங்கள் நெற்றியின் அளவைக் குறைத்துக் காட்டுவதற்கு புருவத்தை அதற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடியும். தவிர புருவத்தை ஷேப் செய்வதால் மட்டும் நெற்றியை சிறிதாக காட்ட முடியாது. நெற்றியை மறைக்கும் படி முடியை முன்புறம் விட்டு ஹேர் ஸ்டைல் பண்ணலாம் அல்லது முடியை முன்புறமாக விட்டு பிரிஞ்ச் கட் செய்து கொள்ளலாம். பின்னர் புருவத்தை மேலே தூக்கலாக தெரியும்படி ஷேப் செய்து கொண்டால் நெற்றியின் அகலம் தெரியாது. பார்க்கவும் மிகவும் அழகாகத் தெரியும். சிலருக்கு புருவத்தில் முடியே இருக்காது. புருவ முடி உதிர்ந்து விட்டதே அல்லது எனக்கு புருவத்தில் முடி இல்லையே எனக் கவலையே பட வேண்டாம். விளக்கெண்ணெயை லேசாகச் சூடு செய்து புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் முடிகள் நன்றாக வளரும். ஐபுரோ ஒயில் வாங்கி வந்து அதை புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் முடி முளைத்து புருவங்கள் அழகாகும். புருவமே இல்லாதவர்கள் நிரந்தரமாக புருவத்தை அமைத்துக் கொள்ள ஐபுரோ டாட்டூ முறையைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஐபுரோ டாட்டூ என்பது புருவங்கள் உள்ள இடத்தில் டாட்டூ பிக்மென்டேஷனை நிரப்பி நிரந்தரமாக புருவங்களை அமைக்கும் மேக்கப்பாகும். இதனால் முகத்திற்கு அழகு கிடைப்பதுடன் உங்களுடைய மனக்குறையும் அகன்று விடும்

Related posts

கருவளையம் மறைய விளக்கெண்ணெயை எப்படியெல்லாம் யூஸ் பண்ணனும்னு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

குளியல் பொடி

nathan

இளமையான சருமத்தை பெறும் ரகசியம்!…

nathan

அழகு குறிப்புகள்:அழகு தரும் பூ…

nathan

மார்பு பகுதியை அழகுடன் வைத்து கொள்ள வழிகள்!…..

nathan

உங்களுக்கு தெரியுமா ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன?

nathan

அழகுக்கு ஆப்பிள் பழம்

nathan

கண்டிப்பா இத பண்ணுங்க.! சருமம் அதிகமா வியர்க்குதா?

nathan

சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிறந்த தீர்வாக மஞ்சள்

sangika