* மஞ்சளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
* பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் நீங்கும். * கஸ்தூரி மஞ்சளை அரைத்து பாலாடை கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும். * சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
சர்க்கரையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துமுகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.இவ்வாறு வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சி தடைபடும்.
கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.
சோள மாவு, 1 டீஸ்பூன் சர்க்கரையை சம அளவு எடுத்து அதனுடன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து, அதனை முகத்தில் தடவி, உலர விட்டு கழுவினால், சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் நீங்கும்.
ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், பொலிவான மற்றும் அழகான சருமத்தைப் பெறலாம்.
கடலை மாவில், சிறிது மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்கும்.