29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
yfuyu
தலைமுடி சிகிச்சை

இந்த எண்ணெயை தினமும் யூஸ் பண்ணுங்க…ஆர்கானிக் முறையில் தயாரிக்க வீட்டிலேயே இந்த பிரிங்கராஜ் எண்ணெய்

கூந்தல் தொடர்பான பல பிரச்சனைகள் தலைக்கு எண்ணெய் தடவுவதன் மூலம் தீர்க்கப்படலாம். தலை டி உடைவது, பொடுகு போன்ற தலைமுடி தொடர்பான சில குறிப்பிட்ட பாதிப்புகளுக்கு தலைக்கு மூலிகை எண்ணெய் தடவுவது ஒரு சிறப்பான சிகிச்சையாகும்.

பிரிங்கராஜ் எண்ணெய் பற்றி மற்றும் கூந்தலுக்கான அதன் நன்மைகளைப் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இந்த எண்ணெய் தலைமுடி மற்றும் உச்சந்தலைக்கு மிகுந்த நன்மை அளிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சந்தைகளில் விற்கப்படும் பல எண்ணெய்களில் இந்த மூலிகை எண்ணெய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

பிரிங்கராஜ் எண்ணெய் தலைமுடிக்கான ஒரு வரப்பிரசாதம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் சந்தைகள் மற்றும் கடைகளில் பரவலாகக் கிடைத்தாலும் அவற்றுள் அதிகமான கலப்படம் செய்யப்படுகிறது. உண்மையில் உங்கள் கூந்தலுக்கு நீடித்த புத்துணர்ச்சி கிடைக்க வீட்டிலேயே இந்த பிரிங்கராஜ் எண்ணெய்யை ஆர்கானிக் முறையில் தயாரிக்க முடியும். இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.
பொடுகு மற்றும் தலைமுடி உதிர்வைப் போக்கும் அற்புதமான பிரிங்கராஜ் எண்ணெய்!
வீட்டில் பிரிங்கராஜ் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
yfuyu
* பிரிங்கராஜ் எண்ணெயை தயாரிக்க, முதலில் பிரிங்க்ராஜ் இலைகளின் சாற்றைப் பிரித்தெடுக்கவும்.

* இந்த சாற்றில் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

* சாறு மற்றும் எண்ணெய்யை ஒன்றாக நன்கு கலந்து குறைந்த வெப்பத்தில் அடுப்பில் வைக்கவும்.

* சாறு எண்ணெயில் முழுவதுமாக கலந்து , எண்ணெய் மட்டுமே மீதம் இருக்கும் போது, அடுப்பை அணைத்துவிடவும்.

* முடி உதிர்தல் பிரச்சினையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த சாறு மற்றும் எண்ணெய்யை அடுப்பில் வைப்பதற்கு முன், அதில் நெல்லிக்காய் சாறு சேர்க்கவும்.

பிரிங்கராஜ் எண்ணெய் தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
tytry 1
பொடுகு

பிரிங்கராஜ் எண்ணெய் கொண்டு தலைமுடிக்கு மசாஜ் செய்வதை வழக்கமாக்கிக் கொள்வதால், உச்சந்தலையில் தொற்று பாதிப்பு உண்டாகாமல் தடுக்கப்படுகிறது. இதனால் பொடுகு பாதிப்பு அறவே நீங்குகிறது. தொடர்ந்து தலைமுடிக்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வருவதால் தலைமுடி நரைக்காமல் இருப்பதுடன் கூந்தலின் இயற்கை குளிர்ச்சி தக்க வைக்கப்படுகிறது. பிரிங்கராஜ் எண்ணெய் ஒரு இயற்கையான எண்ணெய் என்பதால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படுவதில்லை. ஆனால் இந்த எண்ணெய் மிகவும் குளிர்ச்சியானது என்பதனால் குளிர்காலத்தில் இரவில் தலைக்கு இந்த எண்ணெய்யைத் தடவிவிட்டு தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

முடி இழப்பு

தலைமுடி இழப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு பிரிங்கராஜ் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வைத் தருகிறது. இந்த எண்ணெய் கொண்டு தலைக்கு மசாஜ் செய்வதனால் கூந்தல் வேர்கள் வலிமையடைந்து முடி வளர்ச்சி நின்ற இடங்களில் மீண்டும் முடி வளர தொடங்குகிறது. குறிப்பாக இந்த பலனைப் பெறுவதற்கு தலையில் முடி இல்லாத பகுதிகளில் இந்த எண்ணெய்யைத் தடவி மென்மையாக கைகளால் தொடர்ந்து சில நிமிடங்கள் மசாஜ் செய்து அடுத்த சில மணிநேரம் ஊறவிடவும். பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசவும். தலையை அலசும் போது ஷாம்பு பயன்படுத்துவதை விட சீயக்காய் தூள் கொண்டு அலசுவது இன்னும் சிறந்த பலனைத் தரும். காரணம் இந்நாட்களில் சந்தையில் விற்கப்படும் ஷாம்புவில் அதிக அளவில் ரசாயனம் சேர்க்கப்பட்டு கூந்தலை மேலும் பலவீனமாக்குகின்றன.
tfyfty

கூந்தல் வேரிலிருந்து வலிமையடைகிறது

ஆயுர்வேதத்தின்படி, முடி உதிர்தல் மற்றும் பிற முடி பிரச்சனைகள் பித்தம் தொடர்பான பிரச்சனைகளால் ஏற்படுகின்றன, மேலும் பிரிங்க்ராஜ் எண்ணெய் இந்த சிக்கலை சமாளிக்க உதவுகிறது. இது முடி வளர உதவுகிறது. பிரிங்ராஜ் எண்ணெய் கொண்டு தவறாமல் மசாஜ் செய்வது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது முடி வேர்களை ஊக்குவித்து மற்றும் முடி வளர உதவுகிறது. பிரிங்கராஜ் எண்ணெய்யைத் தயாரிக்கும் போது, சீயக்காய், நெல்லிக்காய் போன்ற பிற மருந்துப் பொருட்களையும் இதில் சேர்க்கலாம். இதுதவிர, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயையும் இதில் சேர்க்கலாம். இவை அனைத்தும் உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் ஆக்குகின்றன.

வறண்ட மற்றும் அரிக்கும் உச்சந்தலை

உங்கள் தலைமுடி உலர்ந்ததாகவும், உயிரற்றதாகவும் மாறிவிட்டால், வாரத்திற்கு இரண்டு முறையாவது முடியின் வேர்களுக்கு பிரிங்கராஜ் எண்ணெயைப் பூசி, கைகளால் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இது கூந்தலுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்தைக் கொடுக்கும். இதனால் முடி வறட்சி நீக்கப்படும். இது தவிர, உங்கள் தலைமுடியை தூசி, அழுக்கு மற்றும் மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க வெளியே செல்லும் போது, கூந்தலை நன்றாக முடிந்து கொண்டு செல்ல வேண்டும் அல்லது மூடி வைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பொடுகு, அரிப்பிலிருந்து நிரந்தரமாக விடுதலை தரும் பாட்டி வைத்தியங்கள்!!

nathan

பொடுகுத் தொல்லை அதிகமா இருக்கா? அப்ப இத யூஸ் பண்ணுங்க…

nathan

உங்களுக்கு முடி அதிகமா கொட்டுதா?

nathan

முடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பராமரித்தால், பெண்கள் கூந்தல் பிரச்சினையின்றி நிம்மதியாக வாழலாம்.

nathan

மிருதுவான கூந்தல் கிடைக்கனுமா? ரோஜா இதழ் தெரபி யூஸ் பண்ணுங்க!!

nathan

கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்

nathan

சூப்பர் டிப்ஸ்.. அடர்த்தியான முடி வேண்டுமா? அப்ப இந்த பூவில் எண்ணெய் செஞ்சு தினமும் யூஸ் பண்ணுங்க…

nathan

ஆயில் மசாஜ் செய்தால்தான் முடி வளருமா?

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 எளிய வழிகள்!

nathan