24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Natural ways of caring for face beauty
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

அழகை உடனே அதிகரித்து காட்ட வேண்டுமா? இதோ சில வழிகள்!!!

உங்கள் முகத்தை ஒளிஊட்டுங்கள் உங்கள் தோற்றம் அழகாக இருப்பதற்காக நீங்கள் எடுக்கும் சிறந்த முயற்சிகளில் ஒன்று தான், முகத்திற்கு ஒளி ஊட்டுதல். அதற்கு, சிறிதளவு மாய்ஸ்சரைஸரை வைத்து உங்கள் கண்களை ஈரப்பதமாக்குங்கள். இதனால் கண்களை சுற்றியுள்ள பகுதி வறண்டு காணப்படாது. அதன் பின் மஞ்சள் நிறத்தொனியை கொண்ட, லேசான பிரதிபலிப்பை உண்டாக்கும் கன்சீலரை பயன்படுத்துங்கள். இது கண்களுக்கு கீழ் இருக்கு ஊதா குறிகளை மறைத்து விடும். கன்சீலர் தடவிய பிறகு, எப்போதும் செய்யக்கூடிய ஒப்பனையை தொடங்கலாம்.

முடியை கண்டிஷன் செய்யுங்கள் உங்கள் கூந்தல் வறண்டு, அசிங்கமாக உள்ளதா? கவலையை விடுங்கள். உங்கள் அழகை மெருகேற்ற ஒரு கூந்தலை நல்ல முறையில் கண்டிஷன் செய்தால் போதும்; பார்ப்பதற்கு மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும். கூந்தலுக்கு ஷாம்பூ போட்டு அலசிய பிறகு, கண்டிஷனரை பயன்படுத்தினால், கூந்தல் மின்னப்போவது உறுதி.
கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருங்கள் உங்கள் அழகை உடனடியாக மெருகேற்ற, கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது, மற்றொரு டிப்ஸாக விளங்குகிறது. உங்கள் உள்ளங்கை மென்மையாக, நல்ல நறுமணத்தோடு இருந்தால், உங்கள் மனநிலையை அது ஊக்குவிக்கும். பொதுவாக மற்றவர்களின் கவனம் நம் மேல் முதலில் விழும் பகுதிகளில், நம் கைகளும் ஒன்றாகும். அதனால் அதனை அக்கறையுடன் கவனித்துக் கொள்வது முக்கியமாகும்.Natural ways of caring for face beauty

Related posts

மன பதற்றத்தை தணிக்கும் எண்ணெய் குளியல்

nathan

எண்ணெய் பசை சருமத்திற்கான‌ 10 பயனுள்ள ஆயுர்வேத தீர்வுகள்

nathan

முகப்பருக்களை விரட்டும் ஆரஞ்சு

nathan

சப்போட்டா ஃபேஷியல்

nathan

சருமத்தை மெருகூட்ட மூன்று வழிகள் !!

nathan

வேனிட்டி பாக்ஸ்: பாடி வாஷ்

nathan

முகத்தில் பேசியல் செய்வது எப்படி

nathan

தலை முதல் பாதம் வரை அழகு பராமரிப்பு

nathan

இதை முகத்தில் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இளமையாக மாறும்…..

sangika